சென்னையில் வாக்குவாதத்தின் போது மாணவர்களுக்கு அரிவாள் வெட்டு... 16 பேர் கைது
சென்னை: சென்னையில் கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய 16 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை புரசைவாக்கம் பொன்னப்பன் தெருவை சேர்ந்த சிலர் நேற்று இரவு அப்பகுதியில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று அவர்கள் மீது மோதுவது போல் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வெளியே பேசி கொண்டிருந்தவர்களுக்கும், காரில் இருந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது, காரில் இருந்த நபர்கள், வெளியே இருந்த இளைஞர்களை இரும்பு பைப், அரிவாள், செங்கல், உருட்டு கட்டையால் பயங்கரமாக தாக்கியதாக தெரிகிறது. இதில் பலத்த காயமடைந்த முகமது ரியாஷ் (19), முகமது தாகா (22), முகமது இசாக் (21) ஆகியோர் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.காயமடைந்த 3 பேரும் தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வேப்பேரி போலீசார், காரில் இருந்த நபர்களை காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர்கள் அதே பகுதியை சேர்ந்த ஷாகுல் அமீது (36) மற்றும் அவரது நண்பர்கள் என்பது தெரியவந்தது.
இருதரப்பினருக்கும் இடையே முன்விரோதம் காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக சாகுல் அமீது மற்றும் அவரது கூட்டாளி உள்பட 16 பேர் கைது செய்த போலீஸார், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
Gold Price: மீண்டும் அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை.. கலக்கத்தில் நகை பிரியர்கள்.. இன்றைய ரேட் என்ன? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
பிழைப்பு தேடி தமிழ்நாடு வந்த சிறுவன்..காலி ரயில் பெட்டியில் சீரழித்த கயவர்கள்! துடித்து பலியான சோகம்! -
சிவரஞ்சனியை போட்டு தள்ளிட்டேன், மகளையும் முடிச்சுட்டேன்!" காலங்காத்தாலேயே அம்மாவுக்கு போன் செய்த மகன் -
எல்லா SP-க்களும் சென்னை நோக்கி.. தலைநகரில் 8 பேருக்கு புதுபொறுப்பு! வெயிட்டிங் லிஸ்ட்க்கு குட்பை











Click it and Unblock the Notifications