For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காரீயம் கலப்படம் செய்யப்பட்ட பாக்கு... உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிர்ச்சி: வீடியோ

பாக்குகளில் சுவை கூட்டுவதற்காக காரீயம் கலக்கப்படுகிறது என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததையடுத்து, அவர்கள் ஆய்வு மேற்கொண்டு குடோன் உரிமையாளர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

By Suganthi
Google Oneindia Tamil News

ஈரோடு: அந்தியூரில் உள்ள பாக்கு தயாரிப்பு குடோன்களில் பாக்குடன் வேதியியல் பொருட்கள் கலப்படம் செய்யப்படுகிறது என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து அவர்கள் ஆய்வு மேற்கொண்டு, குடோன் உரிமையாளர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்தியூரில் பாக்கு குடோன்கள் நிறைய உள்ளன. இங்கு பாக்குக்கு சுவை சேர்க்க அதனுடன் பல்வேறு வேதிப்பொருட்களையும் பவுடர்களையும் கலக்கின்றனர். அது மக்களின் உடல்நலத்துக்கு கேடு விளைக்கும் என ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

Lead oxide mixed with areca nuts and food security officials shocked

அதையடுத்து பாக்கு குடோன்களுக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அதில் பாக்குடன் காரியம் போன்ற வேதிபொருட்கள் கலக்கப்பட்டுள்ளன என அதிகாரிகள் கண்டறிந்தனர். அதையடுத்து குடோன் உரிமையாளர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேகி நூடுல்ஸில் கூட காரீயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அதன் விற்பனை தடை செய்யப்பட்டு, தற்போது மீண்டும் மேகி பிராண்ட் நூடுல்ஸ் கடைகளில் விற்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

English summary
Food security officers got complaint that In Anthiyur area nut godown chemicals are mixed with palm nut. They visited the godown and experimented the palm nuts.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X