நடராஜன் விவகாரத்தில் உறுப்பு மாற்று விதிமீறப்பட்டிருந்தால் நடவடிக்கை.. ஜெயக்குமார் தகவல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடராஜன் விவகாரத்தில் உறுப்பு மாற்று விதி மீறப்பட்டிருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஜெயக்குமார் சென்னை அடையாறில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது டெங்கு காய்ச்சலைத் தடுக்க தமிழக அரசு முழு வீச்சில் செயல்பட்டு வருதாக அவர் கூறினார்.

டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சுகாதாரத்துறை முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். டெங்கு காய்ச்சல் விவகாரத்தில் ஸ்டாலின் கூறும் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என்றும் அவர் கூறினார்.

போர்க்கால நடவடிக்கை

போர்க்கால நடவடிக்கை

அரசைக் கலைக்க வேண்டும், இந்த ஆட்சி நீடிக்கக்கூடாது என்ற நோக்கத்திலேயே ஸ்டாலின் இருப்பதாக அவர் குற்றம்சாட்டினார். டெங்கு விவகாரத்தில் அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.

மர்ம தேசம் போன்று இருந்தது

மர்ம தேசம் போன்று இருந்தது


அரசின் மீது உள்ள காழ்ப்புணர்ச்சிக் காரணமாகவே ஸ்டாலின் குறை சொல்வதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
திமுக ஆட்சியில் தமிழகம் மர்ம தேசம் போன்று இருந்ததாக கூறிய அவர், அப்போது இருந்த காய்ச்சல் குறித்து சட்டசபையில் கேள்வி எழுப்பியபோது ஒருவித மர்ம காய்ச்சல் என மூடி மறைத்தனர் என்றும் குற்றம்சாட்டினார்.

உறுப்பு மாற்று விவகாரம்

உறுப்பு மாற்று விவகாரம்

இதைத்தொடர்ந்து நடராஜன் உறுப்பு மாற்று விவகாரத்தில் விதிகள் மீறப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், நடராஜன் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை விதிகள் மீறப்பட்டிருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார்.

சட்டத்தின் முன்பு அனைவரும் சமம்

சட்டத்தின் முன்பு அனைவரும் சமம்

சட்டப்படிதான் உறுப்பு தானங்கள் நடைபெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும் சட்டத்தின் முன்பு அனைவரும் சமம் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Minister Jayakumar said legal action would be taken if the rules violated in the Natarajan organ transaction case. He said Stalin accusing govt unnecessarily.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற