2 மணி நேர முடக்கத்திற்கு பிறகு மீண்டும் முரசு கொட்டுகிறது முரசொலி வெப்சைட்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான முரசொலியின் வெப்சைட் முடக்கப்பட்டிருந்தது. 2 மணி நேரத்திற்கு பிறகு இயல்புக்கு திரும்பியது.

முரசொலி பத்திரிகையின் செய்திகளை அதன் வெப்சைட்டான www.murasoli.in-யிலும் வெளியிடுவது வழக்கம்.

இந்த வெப்சைட்டை இன்று, விஷமிகள் முடக்கினர். லிஜியான் குழு இதை செய்துவிட்டதாக வெப்சைட்டிலேயே குறிப்பிடப்பட்டிருந்தது.

Legion Group hacked DMK's news website Murasoli

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தடை செய்துவிட்டு, வாக்குச்சீட்டு முறைக்கு மாற வேண்டும். வாக்குப்பதிவு இயந்திரத்தால் மோசடிகள் நடப்பதாக ஹேக் செய்தவர்கள் சார்பில் தகவல் பதியப்பட்டிருந்தது. 2 மணி நேரத்திற்கு பிறகு இந்த வெப்சைட் மீட்கப்பட்டு தற்போது திமுக செய்திகள் இடம் பெற்றுள்ளன.

அதிமுக அதிகாரப்பூர்வ செய்தி இணையதளமான 'நமது எம்.ஜி.ஆர்' முன்பு ஒருமுறை ஹேக் செய்யப்பட்டு மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Legion Group hacked DMK's official news website Murasoli.
Please Wait while comments are loading...