கோபாலபுரம் கருணாநிதி வீட்டுக்கு வெளியே விளக்குகள் அணைக்கப்பட்டது!
சென்னை: கோபாலபுரத்தில் கருணாநிதியின் வீட்டு முன்பு திரண்டிருக்கும் தொண்டர்கள் கலைந்து செல்ல வேண்டும் என்பதற்காக வீட்டுக்கு வெளியே உள்ள விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டுள்ளது.
சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை திடீரென மோசமானதாக கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து, காவேரி மருத்துவமனை வெளியிட்ட மருத்துவ அறிக்கையில் கருணாநிதியின் உடல் நிலையில் ஒரு சிறிய பின்னடைவு ஏற்பட்டது. ஆனாலும் மீண்டும் அவருடைய உடல் நலம் சீரடைந்துள்ளது என்று அறிவித்தது.

இதைத்தொடர்ந்து, காவேரி மருத்துவமனையில் குவிந்த கருணாநிதியின் மனைவி ராஜாத்தியம்மாள், மற்றும் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் காவேரி மருத்துவமனையிலிருந்து கோபாலபுரம் விட்டுக்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில், கோபாலபுரத்தில் திமுக தொண்டர்கள் பெரிய அளவில் திரண்டனர். தொடர்து தொண்டர்களின் கூட்டம் அதிகரித்து வருவதால் அவர்கள் அனைவரும் கலைந்து செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடும் கோபாலபுரத்தில் கருணாநிதியின் வீட்டிற்கு வெளியே இருக்கும் விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கோபாலபுரத்தில் திரண்டுள்ள திமுக தொண்டர்கள் கலைந்துசெல்லவில்லை.
அதேபோல, காவேரி மருத்துவமனையில் திரண்டிருக்கும் தொண்டர்களை முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கலைந்து செல்லுங்கள் என்று அறிவுறுத்தியும் கலைந்துசெல்லவில்லை. போலீஸார் அறிவுறுத்தியும் கலைந்து செல்லாமல் உள்ளனர். இதையடுத்து போலீஸார் அங்கே திரண்டிருப்பவர்களின் மீது ஒரு சிறு தடியடியை நடத்தினர்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!