For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பதில் சிக்கல் - ஹைகோட்டில் மாநில தேர்தல் ஆணையம் பதில் மனு

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிப்பதில் சிக்கல் நீடிப்பதாக உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் மனு தாக்கல் செய்துள்ளது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிப்பதற்கான கெடு இன்று முடிவடையும் நிலையில் மாநில தேர்தல் ஆணையம் இன்று ஹைகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

உள்ளாட்சி தேர்தல் தேதியை அறிவிப்பதில் சிக்கல் இருப்பதாக தமிழக தேர்தல் ஆணையம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளது.

நவம்பர் 17க்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வசதியாக செப்டம்பர் 18ம் தேதி தேர்தல் அட்டவணையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

Local body election: SEC reply petition in high court

தமிழகத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடத்தியிருக்க வேண்டும். இது தொடர்பான வழக்குகள் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன.

உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கயும் எடுக்காததால் தேர்தல் தேதி அறிவிப்பு கேள்விக்குறியானது.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான தேதியை செப்டம்பர் 18ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம், மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டிருந்தது. கெடு முடிவடையும் நிலையில் தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிப்பதில் சிக்கல் நீடிப்பதாக மாநில தேர்தல் ஆணையம் தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளது.

1996 பிரிக்கப்பட்ட வார்டு முறைப்படி தேர்தல் நடத்த வேண்டுமா என்று குழப்பம் உள்ளதாக தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. வார்டு வரையரை தொடர்பாக உயர்நீதிமன்றத்தின் விளக்கம் தேவை என்றும் அந்த மனுவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இன்று மதியம் மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட இருப்பதாக தேர்தல் ஆணையம் தகவல். இந்த இரண்டு மனுக்களும் நாளை விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.

தேர்தலை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தாலும், ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் திமுகவைச் சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கு தொடர்ந்திருந்தார், அது நிலுவையில் இருந்து கொண்டிருக்கிறது.

உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு நிலுவையில் இருக்கும் போது, சென்னை உயர்நீதிமன்றம் தேர்தலை நடத்த உத்தரவிட்டிருக்கிறது.

தொகுதி வரையறை பணிகள் முடிந்த பிறகு தேர்தலை நடத்துகிறோம் என்று அனுமதி கோரி தேர்தல் ஆணையமும் உச்சநீதிமன்றத்தில் கடந்த வாரம் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

மாநில தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை ஏற்குமா, அல்லது நிராகரிக்குமா என்பது பற்றி பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

English summary
State Election Commission today file reply petition in higt court, issue notification for the election by September 18. The Madras High Court has ordered that local body elections in Tamil Nadu should be completed by November 17.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X