For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பறக்கும் கப்பல் திட்டம், புதிய பாம்பன் பாலம், தென்னக எரிவாயு தொகுப்பு...

By Mathi
|

90. நீர்வழிப் போக்குவரத்து (பறக்கும் கப்பல் திட்டம்)

ஆயிரம் கிலோ மீட்டருக்கு மேல் உள்ள தமிழக கிழக்குக் கடற்கரை பகுதியில், போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தவும், சுற்றுலா வளர்ச்சி காணவும், சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத போக்குவரத்துத் திட்டமான பறக்கும் கப்பல் திட்டத்தை செயல்படுத்த; சென்னை, மாமல்லபுரம், புதுச்சேரி, பிச்சாவரம், நாகப்பட்டினம், கோடியக்கரை, இராமேஸ்வரம், திருச்செந்தூர், கன்னியாகுமரி, குளச்சல் ஆகிய இடங்களில் படகுத் துறைகளை ஏற்படுத்தவும்; இதற்கெனத் தனிவாரியம் அமைக்க உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு தி.மு.கழகம் வலியுறுத்தும்.

சென்னையிலிருந்து அந்தமானுக்குச் சென்று வரும் கப்பல் போக்குவரத்து நடைபெறும் நாட்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க தி.மு.கழகம் வலியுறுத்தும்.

pamban bridge

91. புதிய ‘பாம்பன்' பாலம்

பாம்பன் ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு 100 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இரும்புத் தூண்கள் அனைத்தும், அதனுடைய முழுதிறனை இழந்துவிட்டதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ள நிலையில் புதிய பாலம் அமைத்திடும் அவசியம் ஏற்பட்டுள்ளது. எனவே, பாம்பன் பகுதியில் புதிய பாலம் ஒன்று அமைக்க வேண்டும் எனவும்; அப்போது செறிவூட்டப்பட்ட கான்கிரீட் தூண்கள் மற்றும் உத்திரங்கள் அமைத்தால், எப்போதும் கடல் நீரால் அரிப்பு ஏற்படாமல், துருப்பிடிக்காமல் நீண்டகாலம் உறுதித் தன்மையுடன் நீடித்து நிலைத்து நிற்கும் என்பதால், அதற்கு உரிய திட்டங்களை மேற்கொள்ள மத்திய அரசை தி.மு.கழகம் வலியுறுத்தும்.

92. கொள்ளிடத்தில் நவீன புதிய பாலம்

நாகை மாவட்டம், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட கீழணைப் பாலம் மிகவும் பழுதடைந்து, அவ்வப்போது குறைந்த கால சீரமைப்புப் பணிகள் நடைபெற்று தற்காலிகப் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்தப் பாலத்திற்குப் பதிலாக, நிகழ்காலத்திலும் - எதிர்காலத்திலும் நடைபெற்றிடும் வாகனப் போக்குவரத்தினைக் கணக்கில் எடுத்துக் கொண்டு, புதிய பாலம் அமைத்திட தேசிய நெடுஞ்சாலை அமைச்சகத்தை தி.மு.கழகம் வலியுறுத்தும்.

93. நீர்ப்பாசனம்

முல்லைப் பெரியார் அணையின் நீர்மட்ட அளவினை 1979ஆம் ஆண்டுக்கு முன்பு இருந்ததைப் போல 152 அடியாக உயர்த்திட, உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பினை நிறைவேற்றிட இந்திய அரசை வலியுறுத்துவோம்.

94. காவிரி நதிநீர்ப் பங்கீடு

தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் இடையிலான காவிரி நதிநீர்ப் பங்கீடு ஒப்பந்தம் சட்டப்படி தொடர்ந்து நீடிக்கக் கூடிய ஒன்று என்றாலும், 1974ஆம் ஆண்டோடு அந்த ஒப்பந்தம் முடிந்துவிடும் என்கின்ற அந்த நிலைப்பாட்டை கர்நாடக அரசு பிடிவாதமாக மேற்கொண்டதைத் தொடர்ந்து, தமிழக விவசாயிகளை பாதுகாத்திட தி.மு.கழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

1971ஆம் ஆண்டு காவிரி நதிநீர் பிரச்சினைக்குத் தீர்வு காண நடுவர் மன்றம் அமைத்திட வேண்டுமென்று, தலைவர் கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்தபோது தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியதோடு; 1990ஆம் ஆண்டும் தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையிலான தி.மு.கழக ஆட்சிக் காலத்தில், காவிரி நடுவர் மன்றம் தேவை என்று இரண்டாவது முறையாக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, 2-6-1990 அன்று திரு. வி.பி.சிங் அவர்கள் பிரதமராக இருந்தபோது, மத்திய அரசால் "காவிரி நடுவர் மன்றம்" அமைக்கப்பட்டது. 28-7-1990 அன்று நடுவர்மன்ற இடைக்காலத் தீர்ப்பு வழங்கப்பட வேண்டுமென்ற கழக ஆட்சியின் கோரிக்கையை ஏற்று,

25-6-1991 அன்று நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

5-2-2007 அன்று தலைவர் கலைஞர் அவர்களின் தலைமையிலான தி.மு.கழக ஆட்சி நடைபெற்றபோது, நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பும் வெளியிடப்பட்டது.

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு 2007ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட போதிலும், இதுவரை அந்தத் தீர்ப்பின் அடிப்படையில் காவிரி டெல்டாப் பகுதி விவசாயிகள் காவிரி நதிநீரை, விவசாயத்திற்குத் தேவையான அளவு,

உரிய காலத்தில் பெற்றுப் பயன்படுத்த முடியாத சூழ்நிலை தொடர்கிறது. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை சட்டப்படி நிறைவேற்ற அமைக்க வேண்டிய காவிரி - மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறைக் குழு இவைகளை உடனடியாக ஒரு காலவரையறைக்குள் அமைக்க வேண்டுமென மத்திய அரசை தி.மு.கழகம் வற்புறுத்தும்.

95. பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம்

தமிழகத்தைச் சேர்ந்த கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள விவசாயிகளின் உயிர்நாடியாக உள்ள "பரம்பிக்குளம் - ஆழியாறு திட்ட"த்தின்கீழ் ஏற்கனவே கேரள மாநிலத்தோடு மேற்கொண்ட ஒப்பந்தத்தின்படி, இன்னும் சில அணைகள் கட்டப்பட வேண்டியுள்ளன. அதில் முக்கியமான அணை, தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் மேல்நீராறு ஆற்றின் தண்ணீரை நேரடியாக குழாய் அமைத்து, திருமூர்த்தி அணைக்குக் கொண்டு வரும் திட்டமாகும்.

தமிழ்நாட்டிற்குள்ளேயே நிறைவேற்றப்பட வேண்டிய இத்திட்டத்தை நிறைவேற்றினால், மேற்சொன்ன மூன்று மாவட்டங்களில் உள்ள 4 இலட்சம் ஏக்கர் நிலங்கள் நன்கு பாசன வசதி பெறும். ஆனால், கேரள அரசு இத்திட்டத்திற்கு முட்டுக்கட்டை போடும் விதமாக இடமலையாறு திட்டத்தை கடந்த 40 ஆண்டுகாலமாக முடிக்காமலேயே, காலதாமதம் செய்து வருகிறது. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால், கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பலன் பெறுவார்கள். எனவே மத்திய அரசு உலக வங்கியின் நிதிஉதவியோடு இத்திட்டத்தை நிறைவேற்றிட தி.மு.கழகம் பாடுபடும்.
.
96. சுற்றுச் சூழல் பாதுகாப்பு

உலகம் வெப்பமயமாகி வருவதால், ஐ.நா. அமைப்பும், மத்திய அரசும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், காடுகளை விரிவாக்கிப் பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றன. இதன் அடிப்படையில் இந்தியாவிலேயே முதல் முறையாக வெப்பமயமாதல் மற்றும் பருவ நிலை மாற்றங்களை ஆய்வு செய்து அரசுக்கு ஆலோசனை வழங்க அண்ணா பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி மையம் ஒன்று (ஊநவேசந கடிச ஊடiஅயவந ஊhயபேந) தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நிறுவப்பட்டுள்ளது. பல ஆயிரங்கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு செயல் திட்டங்கள், மத்திய அரசு, மாநில அரசுகளால் நிறைவேற்றப்படுகின்றன; மானிய உதவியும் அளிக்கப்படுகிறது.

வளர்ச்சித் திட்டங்களின் அவசியம் கருதி, திட்டங்களை அமல்படுத்தும் அதேவேளையில், அத்திட்டங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் "நீடித்த வளர்ச்சி" (ளுரளவயiயேடெந னுநஎநடடியீஅநவே)யை நோக்கமாகக் கொண்டு சுற்றுச்சூழல் சட்டங்கள் அமைந்திட தி.மு.கழகம் வலியுறுத்தும்.

திருப்பூர், ஈரோடு, கரூர், வேலூர் பகுதிகளில் சாயப்பட்டறை, தோல் பதனிடுதல் மற்றும் சலவைத் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர், சுத்திகரிக்கப்பட்டு கடலில் சென்று கலந்திடும் வகையில் ஒரு புதிய திட்டத்தினை மத்திய அரசின் உதவியுடன் செயல்படுத்த தி.மு.க. வலியுறுத்தும்.

97. முன்னாள் இராணுவத்தினர் நலன்

நமது நாட்டினைப் பாதுகாப்பதற்குத் தம் இன்னுயிரையும் தியாகம் செய்யத் தயாராக இருப்பவர்கள் இந்திய இராணுவத்தினர். தங்களுடைய பணிக்காலத்தில் கொட்டும் மழையிலும், கடும் பனியிலும், காடுமேடுகளிலும் சிரமப்பட்டுவிட்டு, ஓய்வுபெறும் காலத்திலாவது அமைதியான குடும்ப வாழ்க்கை வாழ நினைக்கும் முன்னாள் இராணுவத்தினரின் நல்வாழ்வுக்கு உரிய வழிவகை காண்பது நமது கடமையாகும்.

தமிழகத்தில் மட்டும் ஏறத்தாழ 5 இலட்சம் முன்னாள் இராணுவத்தினர் வசித்து வருகின்றனர்.

இவர்கள் நல்வாழ்வுக்கென தமிழகத்தில் தமிழ்நாடு முன்னாள் இராணுவத்தினர் கழகம் என்ற அமைப்பு இயங்கி வருகிறது. இந்தக் கழகத்தை நிர்வகிப்பதற்கு அரசு அதிகாரிகளைத் தவிர்த்து, முன்னாள் இராணுவத்தினரையே நியமிக்க வேண்டும் என மத்திய அரசு நியமித்த கே.பி.சிங் தேவ் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழு பரிந்துரை செய்துள்ளது. இந்தப் பரிந்துரையை நடைமுறைப்படுத்துவதோடு; ஒரு பதவி நிலைக்கு ஒரே மாதிரியான ஓய்வூதியம், தகுதி மற்றும் திறன் அடிப்படையில் முன்னாள் ராணுவத்தினருக்கு அரசுத் துறைகளில் பணி நியமனம், அரசுத் துறைகள் மற்றும் அரசு அலுவலகங்களின் பாதுகாப்புப் பணிகளில் முன்னாள் ராணுவத்தினர் நியமனம் போன்றவற்றை முன்னாள் ராணுவத்தினர் நலன் மற்றும் வாழ்வாதாரப் பாதுகாப்புக்காக நடைமுறைப்படுத்த தி.மு.க.பாடுபடும்.

98.தென்மண்டல எரிவாயுத் தொகுப்பு

கடந்த நாற்பது ஆண்டுகளாகக் கழகம் வலியுறுத்தி வருகிற தென்மண்டல இயற்கை எரிவாயுக் குழாய் இணைப்பு (ளுடிரவாநசn ழுயள ழுசனை) விரைவில் உருவாக அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.

குறிப்பாக குஜராத் மாநிலம் தாஹெஜ் துறைமுகத்தில் இறக்குமதியாகும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (எல்.என்.ஜி.) வைக் குழாய் மூலம் தென்மாநில மண்டலத்துக்குக் கொண்டுவந்து வினியோகம் செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வலியுறுத்தப்படும்.

99.நிரந்தரப் பொருட்காட்சி வளாகம்

பனியன் தொழிற்சாலைகள் நிறைந்த திருப்பூரில் ஒரு நிரந்தரப் பொருட்காட்சி மற்றும் வணிக வளாகத்தை உருவாக்கிட முயற்சிகளை மேற்கொள்வோம்.

100.காப்பிடங்கள்

பேரறிஞர் அண்ணா அவர்கள் "சாலை ஓரத்திலே வேலையற்றதுகள்; வேலையற்றதுகளின் உள்ளத்தில் விபரீத எண்ணங்கள்; அது தான் காலக்குறி" என்று எழுதிய எச்சரிக்கை வரிகளை மனதிலே கொண்டு, வீடற்றவர்களாக சாலைகளில் உறங்கும் மக்களுக்கு உதவிடும் வகையில் காப்பிடங்கள் (அமைத்திட முன்னோடித் திட்டம் உருவாவதற்கு தி.மு.க. முயற்சிகளை மேற்கொள்ளும்.

English summary
The Dravida Munnettra Kazhagam (DMK) will continue to urge the Centre to bring suitable amendments to the official Languages Act to make official languages of all States as official languages at the Centre, the manifesto released on Tuesday by party leader M. Karunanidhi stated.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X