காதலை ஏற்க மறுத்த இளம்பெண்: கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து குதித்த இளைஞர்!
காதல் தோல்வியால் சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து இளைஞர் ஒருவர் கீழே குதித்துள்ளார்.
சென்னை: காதல் தோல்வியால் கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்த இளைஞர் காயங்களுடன் உயிர் தப்பினார்.
சென்னை பரங்கிமலை தண்டுமா நகரைச் சேர்ந்த ரவி என்ற 18 வயது இளைஞர் தனது பாட்டி பார்வதியுடன் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்தப் பெண் அவரது காதலை ஏற்க மறுத்து விட்டார்.

இதனால் மனமுடைந்த ரவி கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து சுமார் 30 அடி ஆழத்தில் கீழே குதித்துள்ளார். இதனைக் கண்ட சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் ரவியை காயங்களுடன் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மணல் மேட்டின் மீது குதித்ததால் ரவி காயங்களுடன் தப்பியதாக கூறிய காவல்துறையினர் அவரது இடது கை மணிக்கட்டு உடைந்துள்ளதாக தெரிவித்தனர். காதல் தோல்வியால் இளைஞர் ஒருவர் போக்குவரத்து நெரிசல் மிக்க கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து குதித்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications