For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரஜினியைவிட கமல்ஹாசன் தான் அரசியலில் சாதிப்பார்... லயோலா முன்னாள் மாணவர்கள் பரபர சர்வே

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை : சினிமாவைப் போல அரசியலிலும் நடிகர் ரஜினிகாந்தை விட கமல்ஹாசன் சாதிக்க வாய்ப்பு இருப்பதாக லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்களின் கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.

பண்பாட்டு மக்கள் தொடர்பகம் மற்றும் லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் இணைந்து மக்கள் மனதில் உள்ள எண்ணங்களை ஆய்வுப் பூர்வமாக அறிவதற்காக 2004ம் ஆண்டு முதல் கள ஆய்வுகளை நடத்தி வருகிறது. இதன்படி தற்போதைய அரசியல் சூழல் குறித்து இந்த அமைப்பினர் கள ஆய்வை நடத்தியுள்ளனர்.

ஆய்வின் முடிவுகளை சென்னையில் பண்பாட்டு மக்கள் தொடர்பகத்தினர் வெளியிட்டனர். அவர்கள் வெளியிட்ட ஆய்வு முடிவுகள் சில:

இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது 2019 நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் நடக்க வாய்ப்பிருப்பதாக 30.2 சதவீதம் பேரும், சட்டசபை கலைக்கப்பட்டு ஆளுநர் ஆட்சி அறிவிக்கப்படும் சாத்தியம் இருப்பதாக 58.8 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.

ரஜினி அரசியலில் ஜொலிப்பாரா?

ரஜினி அரசியலில் ஜொலிப்பாரா?

தமிழக அரசியலில் நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தால் அல்லது மாற்றுக்கட்சியில் இணைந்தால் சினிமாவைப் போல சாதிக்க வாய்ப்பிருக்கிறதா என்றும் கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இதற்கு வெற்றி பெறுவார் என்று 13 சதவீதம் பேரும், வாய்ப்பு குறைவு தான் என்று 75 சதவீதம் பேரும், எதுவும் சொல்வதற்கில்லை என்று 10 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.

கமல் அரசியலில் சாதிப்பாரா?

கமல் அரசியலில் சாதிப்பாரா?

தமிழக அரசியலில் நடிநகர் கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்தார் சினிமாவைப் போல அரசியலில் சாதிக்க வாய்ப்பு இருக்கிறதா என்றும் கருத்து கேட்கப்பட்டுள்ளது. அதற்கு வெற்றி பெறுவார் என்று 29 சதவீத பேரும், வாய்ப்பு குறைவு என்று 61 சதவீத பேரும், எதுவும் சொல்வதற்கில்லை என்று 10 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.

முதல்வர்.. கமலை விட ரஜினி லீடிங்

முதல்வர்.. கமலை விட ரஜினி லீடிங்

தற்போதைய அரசியல் சூழலில் தமிழக முதலமைச்சராக யார் வரவேண்டும் என்பதற்கு ஸ்டாலின் என்று 41 சதவீதம் பேரும், ரஜினி என்று 21 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர். நடிகர் கமல்ஹாசன் முதல்வராக வேண்டும் என 13 சதவீதம் பேர் மட்டுமே கூறியுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றனர். பன்னீர்செல்வத்திற்கு 1 சதவீத ஆதரவு, அன்புமணிக்கு 7 சதவீத ஆதரவு, தினகரனுக்கு 10 சதவீத ஆதரவு உள்ளது.

கமல் கருத்துக்கு அதிமுகவின் எதிர்ப்பே காரணம்

கமல் கருத்துக்கு அதிமுகவின் எதிர்ப்பே காரணம்

நடிகர் கமல்ஹாசனின் அரசியல் கருத்துகள் எத்தகைய வெளிப்பாடை காட்டுகின்றன என்பதற்கு சுய விளம்பரத்திற்காக என்ற 7 சதவீதம் பேர் கூறியுள்ளனர். அரசியல் வெறுப்பு காரணமாக என்ற 28 சதவீதம் மக்களும், அரசியல் ஆர்வம் என்று 20 சதவீதம் பேரும், அதிமுகவிற்கு எதிர்ப்பாக என்று 20 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.

English summary
Loyola college students Panpaattu Makkal Thodarpagam conducted survey regarding current political situation, in this survey People voted that Kamalhaasan will do more in politics rather Rajinikanth.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X