For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லோக்சபா தேர்தல் தோல்வி எதிரொலி: அதிமுக பாணியில் தேமுதிகவிலும் களை எடுப்பு!

Google Oneindia Tamil News

சென்னை: நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக தோல்விக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தயாராகி வருவதாக கூறப்படுகின்றது.

நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக பாஜகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டடது. ஆனால் தேமுதிக போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் படு தோல்வியை தழுவியது. மேலும் இளைஞர் அணி செயலாளரும், தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மைத்துனருமான சுதீஷ்ம் படுதோல்வி அடைந்தார்.

LS poll failure: DMDK to take strict action

தேமுதிக தோல்விக்கு கட்சியின் மாவட்டச் செயலாளர்களும் ஒரு காரணம் என கூறப்படுகின்றது. இந்த நிலையில் தேர்தல் செலவுக்கு என தேமுதிக தலைமை ஒவ்வொரு வேட்பாளருக்கும் தலா ரூ. 50 லட்சம் கொடுத்ததாம். இதில் பலரும் பணத்தை முறையாக செலவு செய்யாமல் அமுக்கிவிட்டார்களாம்.

இது குறித்து தகவல் அறிந்த விஜயகாந்த் கடும் கோபம் கொண்டார். தலைமை கொடுத்த பணத்திற்கு கட்டாயம் கணக்கு கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்யாத வேட்பாளர் மற்றும் மாவட்ட செயலாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் போதவதாக எச்சரித்துள்ளார். இந்த லிஸ்டில் பல மாவட்ட செயலாளர்களுக்கு அதிமுக பாணியில் கல்தா உறுதி என கூறப்படுகின்றது. இதை இப்படியே விட்டால் அடுத்த தேர்தலில் தொடரும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகின்றதாம்.

இதனால் தேமுதிக வேட்பாளர்கள் சிலரும், மாவட்டச் செயலாளர்கள் சிலரும் அதிமுகவுக்கு தூது விட்டுக் கொண்டுள்ளார்களாம்.

English summary
It is told that DMDK chief Vijayakanth is likely to take action against some of his partymen in connection with the lok sabha election failure.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X