தலைமை தகவல் ஆணையராக ராமானுஜத்தை நியமித்தது சட்ட அமைப்பை அவமதிக்கும் செயல்- ஸ்டாலின் கண்டனம்
சென்னை : மாநில தலைமை தகவல் ஆணையராக தமிழக அரசின் ஆலோசகராக செயலாற்றிய ராமானுஜத்தை நியமித்தது அரசியல் சட்ட அமைப்பை அவமதிக்கும் செயல் என தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரது நியமனத்தில் வெளிப்படைத் தன்மை கடைபிடிக்கப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து மு.க.ஸ்டாலின் தனது முகநூலில் கூறியுள்ளதாவது...

பணி நீட்டிப்பு பெற்று மாநில காவல்துறை தலைவராக இருந்து பிறகு பணிஓய்வு பெற்றதும் தமிழக அரசின் ஆலோசகராக செயலாற்றிய திரு. ராமானுஜத்தை இப்போது மாநில தலைமை தகவல் ஆணையராக அ.தி.மு.க அரசு நியமித்திருக்கிறது.
இப்பதவிக்கு ஒருவரை பரிந்துரைக்க தகவல் உரிமை சட்டம்- 2005 ன்படி வரையறுக்கப்பட்டுள்ள தேர்வு நடைமுறைகள் முற்றிலும் மீறப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
தகவல் உரிமைச் சட்டத்தின்படி முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், கேபினட் அமைச்சர் ஆகியோரைக் கொண்ட தேர்வு கமிட்டியின் ஒருமித்த பரிந்துரையின் பேரிலேயே மாநில தலைமை தகவல் ஆணையர் நியமிக்கப்பட வேண்டும்.
ஆனால் இந்த நடைமுறையை கடைபிடிக்கப்படாமல் தங்களுக்கு நெருக்கமான ஒருவரை இப்பதவியில் தன்னிச்சையாக அதிமுக அரசு நியமித்திருக்கிறது.
அரசியல் சட்ட பதவிகளுக்கு வெளிப்படைதன்மையற்ற வகையில் நியமனம் செய்யும் விதத்தில் இந்த நடவடிக்கை அமைவதோடு, மாநில தகவல் ஆணையம் போன்ற அரசியல் சட்ட அமைப்பை இந்த அரசு எப்படி அவமதிக்கிறது என்பதையும் எடுத்துக் காட்டுகிறது.
இவர் ஏற்கனவே உளவுத்துறையில் நீண்ட காலம் பணிபுரிந்து ரகசியம் காத்தவர். அப்படி ரகசியம் காத்தவர் இப்போது வெளிப்படையாக தகவல்களை தெரிவிக்க வேண்டிய தகவல் ஆணையத்தில் எப்படி மக்களுக்கு பயன்படும் வகையில் பணியாற்ற முடியும் என்ற கேள்வி எழுகிறது.
துடிப்பு மிக்க ஜனநாயகத்தில் ரகசியமும், வெளிப்படைத்தன்மையும் ஒன்றாக பயணிக்க முடியாது என்பது அனைவரும் அறிந்தது தான்.
தகவல் ஆணையம் மற்றும் அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை பலவீனப்படுத்தும் வகையிலும், தகவல் பெற விரும்பும் மக்களை அவமதிக்கும் வகையிலும் நடைபெற்றுள்ள இந்த நியமனம் உண்மையிலேயே முறையற்ற நியமனம் என்பதால் வேதனையளிக்கிறது. இது தகவல் உரிமை சட்டத்திற்கு விடப்பட்ட சவாலாகவே நான் கருதுகிறேன்.
இவ்வாறு தனது முகநூலில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications