For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மழைக்காக இடைத்தேர்தலை ஒத்திவைப்பதா?.. ஸ்டாலின் கண்டனம்!

தமிழகத்தில் இரண்டு தொகுதிகளின் இடைத்தேர்தல் தேதிகளை மழைக்காக அறிவிக்காமல் போன தேர்தல் ஆணையத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் இரண்டு தொகுதிகளின் இடைத்தேர்தல் தேதிகளை மழைக்காக அறிவிக்காமல் போன தேர்தல் ஆணையத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகள் தற்போது காலியாக உள்ளது. அதிமுக எம்எல்ஏ டிகே போஸ் மறைவு காரணமாக திருப்பரங்குன்றம் தொகுதி காலியாக உள்ளது. திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி மறைவு காரணமாக திருவாரூர் தொகுதி காலியாக உள்ளது.

M K Stalin condemns TN govt and EIC decision on by-election

இந்த இரண்டு தொகுதிகளுக்கு விரைவில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். மாறாக இந்த இரண்டு தொகுதி இடைத்தேர்தல்கள் பின்பு அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டு இருக்கிறது. இதற்கு தேர்தல் ஆணையம், தமிழக அரசு மழையை காரணம் காட்டியதால் இப்போது தேர்தலை அறிவிக்கவில்லை என்றுள்ளது.

இந்த நிலையில் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகாததற்கு திமுக தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. திமுகவில் தரப்பில் இதற்காகக் வழக்கு தொடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

இதுகுறித்து தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். அதில், தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்திருக்க வேண்டும். தேர்தல் ஆணையம் உள்நோக்கத்துடன் செயல்படுகிறதா என்ற சந்தேகம் வருகிறது.

தலைமை தேர்தல் ஆணையம் இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைதேர்தலை தலைமை தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும்.

மழையை காரணம் காட்டி தலைமைச் செயலாளர் கடிதம் எழுதுவதா?. டிசம்பரில் இவ்வளவு மழை பெய்ய போகிறது என்று ஆட்சியாளர்களுக்கு எப்படி தெரியும். தலைமைச் செயலாளர் எழுதிய கடிதத்தால் தேர்தலை ஒத்திவைப்பது நியாயமல்ல என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

English summary
M K Stalin condemns TN govt and EIC decision on by-election of Thiruvarur and Thirupparamgundram.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X