For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சசிகலா பதவியேற்க எதிர்ப்பு.. ஜனாதிபதியை சந்திக்க டெல்லி விரைகிறார் ஸ்டாலின்

சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு வருவதற்கு முன்னர் சசிகலா பதவியேற்க மு.க. ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஜனாதிபதியிடம் புகார் தெரிவிக்க டெல்லி விரைகிறார் ஸ்டாலின்.

Google Oneindia Tamil News

சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு வந்த பின்னர் சசிகலா முதல்வராக பதவி ஏற்க அனுமதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கோரியுள்ளார்.

இதுதொடர்பாக, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து புகார் அளிக்க இன்று டெல்லி புறப்படுகிறார் மு.க. ஸ்டாலின். இதுகுறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்திக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

M.K. Stalin opposes Sasikala swearing, meets President

சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு விரைவில் வர உள்ள நிலையில் சசிகலா முதல்வராக பதவி ஏற்றால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்றும் தீர்ப்பிற்கு பின்னர் பதவி ஏற்க அனுமதி வழங்க வேண்டும் என்றும் ஸ்டாலின் அவர்களிடம் வலியுறுத்த உள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா இறந்தபோதிலும் சசிகலா உள்ளிட்ட மற்றவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கு தீர்ப்பு தரப்படும் என்று மூத்த வழக்கறிஞர் ஆச்சார்யா கருத்து கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The opposition leader M.K. Stalin opposed Sasikala swearing, will meet President Pranab Mukherjee today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X