மு.க.ஸ்டாலின் கனவு ஒரு போதும் பலிக்காது... தாக்கும் தம்பிதுரை - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஸ்டாலின் கனவு காண்கிறார். அவர் கனவு ஒருபோதும் பலிக்காது என லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார்.

டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய தம்பிதுரை, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், டெல்லிக்கு என் அலுவல் நிமித்திமாக சென்று வருகிறேன். வெங்கய்யா நாயுடு என் நண்பர். நட்புரீதியில்தான் அவரை சந்தித்தேன். அதில் எந்த அரசியலும் இல்லை. நான் அவரிடம் ஜனாதிபதி தேர்தல்குறித்து எதுவும் பேசவில்லை.

அதிமுக ஆட்சி, இன்றுமட்டுமில்லை. என்றும் மத்திய அரசுடன் நட்புறவுடன் இருக்கும் ஆட்சி. நாங்கள் ஒவ்வொரு தொண்டனின் உணர்வுக்கும் மதிப்பளிப்போம். எல்லாருடைய உணர்வுகளுக்கும் மதிப்பளித்துதன் கழகம் முடிவு செய்யும். அதிமுக ஆட்சியை யாரும் கவிழ்க்க முடியாது.

மு.க. ஸ்டாலினின் கனவு

மு.க. ஸ்டாலினின் கனவு

இப்போது ஆட்சியை கவிழ்க்கலாம் என மு.க.ஸ்டாலின் கனவு காண்கிறார். அவர் கனவு காண்பதில் தவறில்லை. ஆனால் கோடிக்கணக்கான அதிமுக தொண்டர்கள் இந்த ஆட்சி நீடிக்க வேண்டுமென நினைக்கிறார்கள்.

தீபா... அது யாரு?

தீபா... அது யாரு?

தீபா என்பவர் யார் என்றே தெரியாது. அவர் அரசியலுக்கு வந்ததாக செய்திகள் பார்த்தேன். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால் அவரை யாரும் அரசியல்வாதியாக ஏற்றுக்கொண்டார்களா என தெரியவில்லை. பிரமாணப் பத்திரம் யார் வேண்டுமானாலும் தாக்கல் செய்யலாம். ஆனால், அது சரியான பத்திரமாக இருக்க வேண்டும் என்பது முக்கியம்.

எடப்பாடி பிரமாணப் பத்திரம்தான் ஒரிஜினல்

எடப்பாடி பிரமாணப் பத்திரம்தான் ஒரிஜினல்

தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி தாக்கல் செய்துள்ள பத்திரங்கள்தான் ஒரிஜினல். எடப்பாடி அரசை 125 எம்.எல்.ஏக்கள் தாங்கிப் பிடித்துள்ளனர். அவர்கள் ஆட்சியை நான்காண்டு காலம் நடத்திச் செல்வார்கள்.ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட இந்த ஆட்சி நிலைக்கும்.

இரட்டை இலை எங்களுக்கே!

இரட்டை இலை எங்களுக்கே!

தேர்தல் ஆணையம், அதிமுக இரண்டாக பிளவுபட்டுள்ளது என அறிவிக்கவே இல்லை.ஆர்கே நகர் இடைதேர்தலுக்கு மட்டும்தான் இரண்டு சின்னங்கள் கொடுத்தார்கள். எம்ஜிஆர் உருவாக்கிய இரட்டை இலையை ஜெயலலிதா ஆண்டார். அதுபோலவே ஆளும் அரசுக்குத்தான் இரட்டை இலை உரிமை கிடைக்கும். அதில் எந்த சந்தேகம் இல்லை என்று தம்பிதுரை கூறினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Admk will be in power for years and it will support Central government by all means
Please Wait while comments are loading...