ஸ்டாலினின் 4வது நாள் காவிரி மீட்பு நடைபயணம்... திருவாரூரில் தொடங்கியது!
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக திருவாரூரில் இருந்து மு.க.ஸ்டாலின் 4வது நாளாக காவிரி உரிமைகள் மீட்புப் பயணத்தை தொடங்கியுள்ளார்.
Recommended Video

திருவாரூர் : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மு.க.ஸ்டாலின் மேற்கொண்டுள்ள காவிரி உரிமைகள் மீட்பு நடைபயணம் 4வது நாளாக தொடர்கிறது. திருவாரூரில் இருந்து ஸ்டாலின் இந்த நடைபயணத்தை தொடங்கியுள்ளார்.
காவிரி டெல்டா விவசாயிகளுக்கு பயன்தரும் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வலியுறுத்தி திமுக பல கட்ட போராட்டங்களை முன்எடுத்து வருகிறது. கடந்த ஏப்ரல் 7ம் தேதி முதல் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் திருச்சி முக்கொம்பில் இருந்து காவிரி உரிமைகள் மீட்பு நடைபயணத்தை தொடங்கியுள்ளார்.

டெல்டா மாவட்ட விவசாயிகளுக்காக ஸ்டாலின் மேற்கொள்ளும் இந்த நடைபயணம் பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. 3 நாட்கள் இந்த நடைபயணம் முடிந்துள்ள நிலையில் இன்று 4வது நாளாக காவிரி உரிமைகள் மீட்புப் பயணம் திருவாரூரில் இருந்து தொடங்கியுள்ளது. திருவாரூரில் தன்னுடைய வீட்டில் இருந்து தொடங்கியுள்ள நடைபயணமானது பவித்ரமாணிக்கம், கூத்தாநல்லூர், மன்னார்குடி உள்ளிட்ட பகுதிகளில் ஸ்டாலின் விவசாயிகளை சந்தித்து பேசுகிறார்.
கோட்டூர், குழிக்கரை வழியாக திருத்துறைப்பூண்டியை நடைபயணம் சென்றடைய திட்டமிடப்பட்டுள்ளது. இன்று மாலையில் ஸ்டாலின் தலைமையில் திருத்துறைப்பூண்டியில் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருத்துறைப்பூண்டி கூட்டத்தை முடித்துக் கொண்டு ஸ்டாலின் நாகப்பட்டினம் செல்ல உள்ளார். வழி நெடுகிலும் ஸ்டாலினை சந்தித்து விவசாயிகளும், பொதுமக்களும் நடைபயணம் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications