வெள்ளத்தை தடுக்க முன்னெச்சரிக்கை எதுவும் எடுக்கலையே... அரசை குற்றம் சாட்டும் ஸ்டாலின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கால்வாய்களை தூர்வாராத காரணத்தினால் சென்னையில் ஒருநாள் மழைக்கே வெள்ளம் சூழ்ந்து மிதக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை கொளத்தூரில் மழை வெள்ளம் பாதிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். கொளத்தூர் தொகுதியில் அம்பேத்கர் நகரில் வெள்ளம் பாதித்த இடத்தை ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

M K Stalin Visits Rain Affected Areas at Kolathur

சென்னை மாநகராட்சி சார்பில் தூர்வாரப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் மழை நீர் தேங்கி இருக்காது. வெள்ளம் வந்த பின்னர் போர்கால நடவடிக்கை எடுத்து எந்த பயனும் இல்லை என்றும், வரும் முன் தடுத்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

எண்ணூர்-முட்டுக்காடு இடையே கால்வாயை தூர் வாரி இருந்தால் வெள்ளம் ஏற்படாது என்றும் கூறியுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
DMK working president Stalin today visited rain affected area kolathur.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற