“காலி” பாட்டில் சேகரித்து காயலான் கடையில் போட்டு டெபாசிட்... மது குடிப்போர் சங்க வேட்பாளர் அதிரடி
தஞ்சாவூர் சட்டசபைத் தொகுதியில் போட்டியிடும் மது குடிப்போர் சங்க வேட்பாளர் ஆறுமுகம், அங்குள்ள மது குடிப்போரிடம் காலிபாட்டில்களை வாங்கி அதனை காயலான் கடையில் போட்டு அதில் கிடைக்கும் பணத்தை வைத்து டெபாசிட
தஞ்சாவூர்: தஞ்சாவூர் சட்டசபைத் தொகுதிக்கான தேர்தலில் போட்டியிடும் மது குடிப்போர் சங்க வேட்பாளர் ஆறுமுகம், மது குடிப்போரிடம் காலிபாட்டில்களை வாங்கி அதனை காயலான் கடையில் போட்டு அதில் கிடைக்கும் பணத்தை வைத்து டெபாசிட் கட்ட இருப்பதாக அறிவித்துள்ளார்.
தஞ்சாவூர், அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் சட்டசபைத் தொகுதிக்கு வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
இன்று முதல் இந்தத் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் தொடங்குகிறது.

மதுகுடிப்போர் சங்க வேட்பாளர்...
இந்நிலையில் தஞ்சாவூர் தொகுதியில் தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் சார்பில் ஆறுமுகம் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அதிரடி திட்டம்...
இவர் நாளை (27.10.2016) தஞ்சாவூரில் மதுகுடிப்போரிடம் காலி பாட்டில்கள், வாட்டர் பாக்கெட் காலி கவர்கள், பிளாஸ்டிக் டம்ளர்களை சேகரித்து, அதனை காயலான் கடையில் போட்டு, அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் டெபாசிட் கட்ட இருக்கிறாராம்.

கையேந்தி வாங்கி...
இது தொடர்பாக தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்க மாநிலத் தலைவர் செல்லபாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "நாளை. ...27.10.16தஞ்சாவூர் தொகுதியில். நமது வேட்பாளராக போட்டியிடும் ஆறுமுகம் அவர்கள். டெபாசிட்"தொகைக்காக தஞ்சாவூர் மதுகுடிப்போரிடம் "காலிபாட்டில்கள், வாட்டர் பாக்கெட் காலிகவர்கள், பிளாஸ்டிக் டம்ளர்களை"தெருத்தெருவாக"கையேந்திவாங்கி. ...காயிலாங்கடையில் எடைக்கு போட்டுஅதில்கிடைக்கும்"பணத்தில்"டெபாசிட்"செலுத்தி வைட்புமனுதாக்கால் செய்து பட்டியில் உள்ளார்.

டெங்கு விழிப்புணார்வு...
இதன்மூலம் டெங்கு"ஒழிப்பில் மதுகுடிப்போர்பங்கு "கண்டயிடங்களில்...காலிபாட்டில்கள், பிளாஸ்டிக் கழிவுகளை போடக்கூடாதென்பதையும்விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications