இன்னும் ஒரு அடி தான் மதுராந்தகம் ஏரி முழு கொள்ளளவை எட்ட... தயார் நிலையில் பொதுப்பணித்துறை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் ஏரி முழு கொள்ளளவை ட்ட ஒரு அடி மட்டுமே உள்ளது. இதனால் ஏரி நிரம்பினால் தண்ணீரைத் திறந்துவிட பொதுப்பணித்துறையினர் தயார்நிலையில் உள்ளனர்.

வடகிழக்குப் பருவமழை கடந்த ஒரு வாரமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் வெளுத்து வாங்குகிறது. சென்னையில் தாழ்வான பகுதிகளில் தேங்கியிருந்த மழைநீர் கொஞ்சம் கொஞ்சமாக வடியத் தொடங்கியுள்ளன. எனினும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அந்த மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

 Madhuranthagam lake reached its full capacity but no flood alert issued by Kancheepuram collector

காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதே போன்று மதுராந்தகம் ஏரியும் முழு கொள்ளவான 23.20அடியில் 22.5 அடியை எட்டியுள்ளது. இன்னும் ஏரி முழு கொள்ளளவை எட்ட ஒரு அடி மட்டுமே உள்ள நிலையில் உபரி நீரை வெளியேற்ற பொதுப்பணித்துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.

ஏரியின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியவுடன் வெளியேற்றப்படும் உபரி நீரானது இந்த ஏரியின் கிளை கால்வாய் மற்றும் ஏரிகளுக்கு சென்று பயனளிக்கும் சென்று பொதுப்பணித்துறையினர் தெரிவிக்கின்றனர். எனவே மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று மாவட்ட ஆட்சியர் முத்தையா கேட்டுக் கொண்டுள்ளார்.

இதே போன்று செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டமும் கட்டுப்பாட்டிற்குள்ளேயே இருப்பதாகவும், ஏரியின் நீர்மட்டம் 30 சதவீதத்தை மட்டுமே எட்டியுள்ளதால் மக்கள் வெள்ள அபாய என்ற வீணாண வதந்திகளை நம்ப வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியரும், தமிழக அரசும் கேட்டுக் கொண்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Maduranthagam lake reached its full capacity and pwd officcials were in alert to release the surplus water which could not affect the people rather 31 branch lakes will get irrigation ollector assures.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற