Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரசு ஊழியர்கள் மீதான லஞ்ச புகார்: தமிழக அரசின் புதிய அரசாணை ரத்து - ஹைகோர்ட் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: லஞ்சப் புகாரில் சிக்கிய உயர் அதிகாரிகளை கைது செய்யும் முன் அரசின் அனுமதி பெறவேண்டும் என்ற தமிழக அரசின் புதிய ஆணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகார்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிப்பதற்கு, தலைமைச் செயலர் அடங்கிய 3 பேர் கொண்ட குழுவினரிடம் கலந்தாலோசிக்க வேண்டும் என்ற அரசாணையை ரத்து செய்யக் கோரி வழக்கறிஞர் புகழேந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

Madras HC quashes a government order for bribe case

அந்த மனுவில் வினித் நாராயணன் என்பவரது வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஊழல் குற்றச்சாட்டில் அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேரடியாக வழக்குப்பதிவு செய்யலாம். இதற்காக அரசு ஒப்புதல் தேவையில்லை என்று கூறியுள்ளது.

ஆனால் தமிழக அரசு கடந்த 1988ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவில், ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ். அதிகாரிகள் மீது ஊழல் குற்றச்சாட்டு வந்தால், அந்த ஊழல் புகாரை அரசுக்கு அனுப்பிவைக்க வேண்டும். அந்த புகார் மீது தமிழக விஜிலென்ஸ் கமிஷன் ஆய்வு செய்து, ஒப்புதல் வழங்கப்பட்ட பின்னரே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து, மேற்கொண்டு விசாரிக்க முடியும் என்று கூறியுள்ளது.

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க ஊழல் தடுப்பு, லஞ்ச ஒழிப்புப் பிரிவுக்கு அதிகாரம் வழங்கப்படாமல் இருப்பது, குற்றச் செயல் புரியும்போது அனைவரும் சமம் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரானது என மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இது தொடர்பாக ஆராய்ந்து புதிய அரசாணை வெளியிட வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

கடந்த பிப்ரவரி 2ம் தேதி தமிழக அரசு புதிய அரசாணை ஒன்றை வெளியிட்டது. அதன்படி, ஊழல் புகாருக்கு உள்ளாகும் அரசு ஊழியர்கள் மீது தலைமைச் செயலர் அடங்கிய குழுவினரிடம் ஒப்புதல் பெற்ற பிறகே, லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை எடுக்க முடியும் என தமிழக அரசு அந்த அரசாணையில் தெரிவித்திருந்தது. .

இதன் மூலம் லஞ்ச புகார்களில், ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு கடைப்பிடிக்கப்படும் நடைமுறை அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டது.

புதிய அரசாணையினால் லஞ்சம் வாங்கும் போக்கு அதிகரிக்கும் என்ற கருத்து பரவலாக கூறப்பட்டது. ஏற்கெனவே பல லஞ்ச வழக்குகளில் உரிய சாட்சியம், ஆவணங்களுடன் பிடிப்பட்டவர்கள் மீதான நடவடிக்கைக்கே தீர்வு காணப்படாமல் உள்ளது. மேலும், முன் அனுமதி அளிக்க கூடிய அரசு அதிகாரிகளுடன் கைக்கோரத்துக் கொண்டு பட்டவர்த்தனமாகவே லஞ்ச பரிவர்த்தனை செய்யும் அபாயம் உள்ளதாகவும் கருத்து தெரிவித்தனர்.

இந்த புதிய அரசாணையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் புகழேந்தி வழக்கு தொடர்ந்தார். அதில், "அரசு ஊழியர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்து ஒப்புதல் பெற்ற பின்னரே வழக்குப்பதிவு செய்யவேண்டும் என்ற அரசாணை சட்டவிரோதமானது.

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது. பிப்ரவரி 2 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட இந்த அரசாணையை ரத்து செய்யவேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்பு கடந்த மார்ச் மாதம் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "இந்த அரசாணைக்கு தடை விதிக்க முடியாது. அதேநேரம், இந்த மனுவுக்கு தமிழக அரசு 4 வாரத்துக்குள் பதிலளிக்கவேண்டும். விசாரணையை வருகிற ஜூன் 13 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக தெரிவித்தார்.

இன்று இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் லஞ்ச புகாரில் அரசு அதிகாரிகளை கைது செய்ய அனுமதி பெற வேண்டும் என்ற தமிழக அரசின் புதிய அரசாணை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+