For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோவை சிறுவர்கள் கொலை வழக்கு- குற்றவாளியின் தூக்கை உறுதி செய்தது ஹைகோர்ட்!

By Mathi
Google Oneindia Tamil News

Madras HC upholds death sentence in Coimbatore twin murder case
சென்னை: கோயம்புத்தூரில் பள்ளி சிறுவர்கள் முஸ்கான், ரித்திக் ஆகியோர் படுகொலை வழக்கில் குற்றவாளி மனோகரனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் இன்று உறுதி செய்தது.

கடந்த 2010ஆம் ஆண்டு கோவையைச் சேர்ந்த சிறுமி முஸ்கான் மற்றும் சிறுவன் ரித்திக் ஆகியோரை கார் ஓட்டுநர் மோகன்ராஜ் என்பவன் கடத்தி படுகொலை செய்தான். இக்கொலை வழக்கில் சிறுமி முஸ்கான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதும் தெரியவந்தது.

இந்நிலையில் போலீசிடம் சிக்கிய மோகன்ராஜ் தப்பியோட முயன்றதால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டான். மற்றொரு குற்றவாளியான மனோகரனுக்கு கோவை மகளிர் நீதிமன்றம் 2012ஆம் ஆண்டு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனோகரன் மேல்முறையீடு செய்தான். இந்த மனுவை இன்று தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் மனோகரனின் தூக்கு தண்டனையை உறுதி செய்தது.

English summary
The Madras High Court upheld death penalty awarded by a trial court to 27-year old Manoharan for the murder of a 10-year old girl and her younger brother after raping her in Coimbatore.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X