ஜீவனாம்சம் கோரும் மனுக்களின் விசாரணையை 60 நாட்களில் முடிக்க வேண்டும்: சென்னை ஹைகோர்ட்
ஜீவனாம்சம் கோரும் மனுக்களின் விசாரணையை 60 நாட்களில் முடிக்க வேண்டும் என கீழமை நீதிமன்றங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஜீவனாம்சம் கோரும் மனுக்களின் விசாரணையை 60 நாட்களில் முடிக்க வேண்டும் என கீழமை நீதிமன்றங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தைத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 2014ஆம் ஆண்டு ஜீவனாம்சம் பெற்றுத்தரக்கோரி கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு விசாரணை இன்னும் முடிவுக்கு வரவில்லை எனத் தெரிகிறது.

இந்நிலையில் இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் 60 நாட்களுக்குள் ஜீவனாம்சம் கோரும் வழக்குகளின் விசாரணையை முடிக்க வேண்டும் என கீழமை நீதிமன்றங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications