தென் மதுரைச் சீமையிலே.... ஏப். 21ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது சித்திரைத் திருவிழா!
மதுரை: தமிழகத்தின் மிகப் பெரிய திருவிழாக்களில் ஒன்றான மதுரை சித்திரைத் திருவிழா ஏப்ரல் 21ம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
சைவ, வைணவ நல்லிணக்க விழாவான இந்த விழாவின் முக்கிய நிகழ்வுகளின் தேதிகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
ஏப்ரல் 30ம் தேதி மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெறுகிறது. மே 4ம் தேதி அருள்மிகு கள்ளழகர் மதுரை வைகை ஆற்றில் இறங்குகிறார்.

சித்திரை திருவிழா தேதிகள்:
சித்திரை 8 (ஏப் 21 செவ்வாய்) : சித்திரை திருவிழா கொடியேற்றம். கற்பக விரிக்ஷ சிம்ம வாகனம்.
சித்திரை 9 (ஏப் 22 புதன்) : பூத அன்ன வாகனம்
சித்திரை 10 (ஏப் 23 வியாழன்) : கைலாச பர்வதம், காமதேனு வாகனம்.
சித்திரை 11 (ஏப் 24 வெள்ளி) : தங்க பல்லாக்கு.
சித்திரை 12 (ஏப் 25 சனி) : வேடர் பாரி லீலை, தங்க குதிரை வாகனம்.
சித்திரை 13 (ஏப் 26 ஞாயிறு) : சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை, ரிஷப வாகனம்.
சித்திரை 14 (ஏப் 27 திங்கள்) : நந்தீக்ஷ்வரர் யாழி வாகனம்.
சித்திரை 15 (ஏப் 28 செவ்வாய்) : ஸ்ரீ மீனாட்சி பட்டாபிஷேகம். வெள்ளி சிம்மாசன உலா.
சித்திரை 16 (ஏப் 29 புதன்) : ஸ்ரீ மீனாஷி திக்விஜயம். இந்திர விமான உலா
சித்திரை 17 (ஏப் 30 வியாழன்) : ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம். யானை வாகனம். புஷ்ப பல்லக்கு.
சித்திரை 18 (மே 1 வெள்ளி) : திரு தேர் - தேரோட்டம்.
சித்திரை 19 (மே 2 சனி) : தீர்த்தம் - வெள்ளி விருட்சப சேவை (கள்ளழகர்)
சித்திரை 20 (மே 3 ஞாயிறு) : தல்லாகுளத்தில் எதிர்சேவை.
சித்திரை 21 (மே 4 திங்கள்) : கள்ளழகர் வைகையாற்றில் தங்க குதிரை வாகனத்தில் ஆரோகனித்து எழுந்தருளல்.
சித்திரை 22 (மே 5 செவ்வாய்) : திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் வண்டியூர் தேனூர் மண்டபம். காலையில் சேஷ வாகனம், மதியம் கருட வாகனம். மண்டுக மகாரிஷிக்கு மோட்சம், இரவில் ராமராயர் மண்டபத்தில் தசாவதார காட்சி.
சித்திரை 23 (மே 6 புதன்) : காலையில் கள்ளழகர் மோகன அவதாரம், இரவில் புஷ்ப பல்லக்கில் திருக்கோலம்.
சித்திரை 24 (மே 7 வியாழன்) : அழகர் மலையில் எழுந்தருளல்.
சித்திரைத் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் மதுரை மற்றும் அழகர்கோவிலில் தொடங்கியுள்ளன. பாதுகாப்பு உள்ளிட்ட பிற ஏற்பாடுகள் குறித்த
ஆலோசனைகள் மதுரையில் தொடங்கியுள்ளன.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications