இது தான் ரோடு போட்ட லெட்சணமா? வாடிப்பட்டியில் வறுத்தெடுத்த மதுரை கலெக்டர்! அரண்டு போன அதிகாரிகள்!
மதுரை: மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் ஆய்வுக்கு சென்ற மாவட்ட ஆட்சியர் சங்கீதா, அங்கு போடப்பட்டிருந்த தரமற்ற தார் சாலையை கண்டவுடன் அதிகாரிகளை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிவிட்டார்.
''இது தான் ரோடா? இந்த ரோடு போட்டு என்ன யூஸ்? என் வண்டி வந்தாலே பெயர்ந்து விடும் போலிருக்கே'' என சரமாரியாக கேள்விக்கணைகளை வீசியதால், மாவட்ட ஆட்சியரை சமாளிக்க முடியாமல் லோக்கல் பிடிஓ முதல் உதவி பொறியாளர்கள் வரை அரண்டு போய் நின்றனர்.

மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா காட்டிய கெடுபிடியை பார்க்கும் போது, தரமற்ற தார்சாலை போடுவதற்கு தலையை ஆட்டிக்கொண்டு கமிஷன் பெற்றவர்கள் அனைவர் மீதும் துறை ரீதியாக கடும் நடவடிக்கை பாயலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மதுரை மாவட்ட ஆட்சியராக அனிஷ் சேகர் இருந்த நிலையில் அவர் இடமாற்றம் செய்யப்பட்டு மதுரை மாவட்டத்தின் புதிய கலெக்டராக சங்கீதா நியமிக்கப்பட்டார். இவர் கடந்த மே 23ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டு அலுவல் பணிகளை கவனிக்க ஆரம்பித்துவிட்டார்.
அந்த வகையில் மதுரை மாவட்டம் வாடிப்பட்டியிலிருந்து குலசேகரன்கோட்டை கிராமம் வரை 1.5 கிமீ தொலைவுக்கு ரூ.1 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட தார் சாலையை நேரில் ஆய்வு செய்யச் சென்ற கலெக்டர் சங்கீதா, சாலையை பார்த்தவுடன் கொதித்து போய்விட்டார்.

காலால் தேய்த்தாலே சாலை பொளபொளவென பெயர்ந்ததால் அங்கிருந்த அதிகாரிகளை வறுத்தெடுத்து விட்டார். இதற்கு சாலை போடாமலே இருந்திருக்கலாமே, இப்படி ஒரு சாலையை போட்டதால் யாருக்கு என்ன பயன்? என வெளுத்து வாங்கினார். ஒப்பந்ததாரரிடம் கமிஷன் வாங்கிய போது பல்லை இளித்துக்கொண்டு தலையை தலையை ஆட்டிய அதிகாரிகள் புது கலெக்டர் காட்டிய கறாரால் ஆடிப்போய் அரண்டு போய் நின்றனர்.
மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதாவை பொறுத்தவரை சற்று துணிச்சலானவர் என்பதோடு ஆய்வுகளால் அலறவிடக் கூடியவர். இதனால் இவரை எப்படி சமாளிப்பது எனத் தெரியாமல் குறுக்கு வழியில் முன்னேற துடிக்கும் ஒரு சிலர் மட்டும் கலக்கம் அடைந்துள்ளனர்.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது?












Click it and Unblock the Notifications