மதுரை கள்ளழகர் கோயிலில் ஆடிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை கள்ளழகர் கோயில் ஆடிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் மிக கோலாகலமாகத் தொடங்கியது. பக்தர்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.

Madurai Alagar kovil Aadi festival starts-Oneindia Tamil

மதுரை கள்ளழகர் கோயில் ஆடிப் பெருந்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. மங்கள வாத்தியங்கள் இசைக்க கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

மேலும், கோயிலில் ஆகஸ்டு 7ஆம் தேதி தேரோட்டம் நடக்கவிருக்கிறது. அதையொட்டி தினமும் காலையில் தங்கப் பல்லக்கில் சுவாமி எழுந்தருளுகிறார்.அதேபோல் இரவு நேரங்களில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் தருகிறார்.

ஆடிப்பெருந்திருவிழா ஆகஸ்டு 9ஆம் தேதி சாந்தி உற்சவத்துடன் நிறைவடைகிறது. இதையொட்டி கோயிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
In Madurai kallagar temple Aadi festival started with flag hoisting and thousands of devotees participated in this festival.
Please Wait while comments are loading...