கடையில் திருஷ்டி சுற்றியதுதான் தீவிபத்துக்கு காரணமா? கடை உரிமையாளரிடம் மதுரை போலீஸ் விசாரணை

Posted By:
Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை தீவிபத்துக்கான காரணம் குறித்து கடை உரிமையாளரிடம் மதுரை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தீவிபத்து தினத்தன்று கடைக்காரர் திருஷ்டி சுற்றியதே தீவிபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் உள்ள ஒரு கடையில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீ மளமளவென பரவி மற்ற கடைகளுக்கு சென்றதால் 50 கடைகள் எரிந்து நாசமாகின.

Madurai Police inquires shop owner in Mennakshi Amman temple fire accident

வீர வசந்த மண்டபம் முழுமையாக சேதமடைந்தது. இங்குள்ள மாடங்களில் இருந்த புறாக்கள் வெப்பத்தின் தாக்கத்தால் கருகி உயிரிழந்தன. இந்த கோயில் மீது பொதுமக்கள் சரமாரியாக குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து போலீஸார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது தீவிபத்து நடந்த கடையை பூட்டும்போது அதன் உரிமையாளர் திருஷ்டி சுற்றும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

இதையடுத்து போலீஸார் உரிமையாளர் முருகபாண்டியை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருஷ்டி சுற்றியபோது தீவிபத்து நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Madurai Police inquires shop owner in the issue of Meenakshi Amman temple fire accident.They inquire based on the CCTV footage.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற