Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கணவனின் கள்ளத்தொடர்பு... கொதிக்கும் எண்ணெயை "அதில்" ஊற்றிய "சசிகலா"!

மனைவியும் 3 குழந்தைகளும் இருக்கும் போதே கள்ளத் தொடர்பு வைத்த கணவனுக்கு கொதிக்கும் எண்ணெயை ஊற்றி தண்டனை கொடுத்துள்ளார் மதுரை பெண் ஒருவர்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    கணவனின் கள்ளத்தொடர்பு... கொதிக்கும் எண்ணெயை 'அதில்' ஊற்றிய 'சசிகலா'!- வீடியோ

    மதுரை: தன்னை விட்டு விட்டு வேறு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்த கணவனுக்கு கொதிக்கும் எண்ணெயை ஆணுறுப்பில் ஊற்றி தண்டனை கொடுத்துள்ளார் சசிகலா. மதுரையில் இந்த சம்பவம் பரபரப்பாக பேசப்படுகிறது.

    மதுரை நேரு நகரை சேர்ந்தவர் பரமேஸ்வரன். ஆட்டோ ஓட்டி பிழைத்து வருகிறார். இவரது மனைவி சசிகலா. இந்த தம்பதியினருக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

    மனைவியும் குழந்தைகளும் இருக்கும் போதே பரமேஸ்வரனுக்கு விரட்டிப்பத்து பகுதியில் ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    கணவனின் கள்ளத்தொடர்பு

    கணவனின் கள்ளத்தொடர்பு

    கணவனின் கள்ளத்தொடர்பை அறிந்த சசிகலா கணவனிடம் சண்டை போட்டுள்ளார். இதனால் பரமேஸ்வரன் வீட்டுக்கு வருவதையே நிறுத்தி விட்டு விராட்டிபத்தில் தங்கிவிட்டார்.

    விடாமல் தொடர்ந்த பரமேஸ்வரன்

    விடாமல் தொடர்ந்த பரமேஸ்வரன்

    கணவனின் செயல் குறித்து சசிகலா எஸ்எஸ் காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    பரமேஸ்வரனை அழைத்த போலீசார் அவரை கண்டித்துள்ளனர். ஆனாலும் பரமேஸ்வரன் கேட்கவில்லை தனது பழக்கத்தை தொடர்ந்தார்.

    சசிகலா ஸ்கெட்ச்

    சசிகலா ஸ்கெட்ச்

    இதெல்லாம் சரிப்பட்டு வராது என்று நினைத்த சசிகலா கணவரிடம் நைசாக போனில் பேசினார். இனி எதுவும் கேட்கமாட்டேன் என்றும் தன்னுடன் மதுரைக்கு வந்து வசிக்குமாறு அழைத்தார்.

    கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய சசிகலா

    கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய சசிகலா

    மனைவியின் மென்மையான பேச்சில் உருகிய பரமேஸ்வரன், நம்பி வீட்டிற்கு சென்றார். சந்தோசமாகவே போனது. சாப்பிட்டு விட்டு அசந்து தூங்கினார் பரமேஸ்வரன் நன்றாக தூங்கி கொண்டிருக்கும்போது , எண்ணெயை கொதிக்க வைத்து அவரது அந்தரங்க உறுப்பில் ஊற்றினார்.

    போலீஸ் வழக்குப் பதிவு

    போலீஸ் வழக்குப் பதிவு

    வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார் பரமேஸ்வரன். அக்கம் பக்கத்தினர் உடனே மதுரை ராஜாஜி மருத்துவமனையில் பரமேஸ்வரனை சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சசிகலாவை எஸ்எஸ் காலணி போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

    கணவனுக்கு தண்டனை

    கணவனுக்கு தண்டனை

    சசிகலா மீது இரண்டு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். கள்ளத்தொடர்பு வைத்த கணவனுக்கு கொதிக்கும் எண்ணெயை ஊற்றி மனைவி கொடுத்த தண்டனை மதுரை சுற்றுவட்டாரப்பகுதிகளில் பரபரப்பாக பேசப்படுகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+