டாஸ்மாக்கை மூடு... "மக்கள் அதிகாரம்" போராட்டம்... போலீஸ் தடியடி... பெண்கள் காயம்
சென்னை: டாஸ்மாக் கடையை மூடக்கோரி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை மதுரவாயலில் போராட்டம் நடத்திய மக்கள் அதிகாரம் அமைப்பினர் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள மதுக்கடைகளை வரும் 4-ம் தேதிக்குள் மூட வேண்டும் என வலியுறுத்தி அந்தந்த மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான ஆட்சியரிடம் மக்கள் அதிகாரம் உள்ளிட்ட அமைப்புகள் மனு அளித்திருந்தன. டாஸ்மாக் கடைகளை மூடாமல் தமிழக சட்டசபை தேர்தலை நேர்மையாக நடத்த முடியாது என்பது அவர்களது வாதம்.

ஆனால், மக்கள் அதிகாரம் அமைப்பினரின் கோரிக்கையை ஏற்று டாஸ்மாக் கடைகள் மூடப்படவில்லை. இதனால், இன்று அந்த அமைப்பினர் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் வெயிலையும் பொருட்படுத்தாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அந்தவகையில் மதுரவாயல் சாலையில் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமான பெண்கள், கைக்குழந்தைகள் மற்றும் குழந்தைகளுடன் பங்கேற்றனர். அப்போது அங்கு வந்த போலீசார், போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தி கலைக்க முற்பட்டனர். இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதில், பெண்கள் மற்றும் சிறுவர்கள் பலத்த காயம் அடைந்தனர். பெண்களின் மண்டை உடைந்தது. போலீசாரின் தாக்குதலில் சிறுவன் ஒருவன் மயக்கமடைந்து, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திய போலீசாருக்கு பொதுமக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். பெண்கள் என்றும் பாராமல், தலைமுடி, உடையைப் பிடித்து இழுத்து போலீசார் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சென்னையைப் போலவே, கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் குவிந்த மக்கள் அதிகாரம் அமைப்பினர், அங்குள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வலுக்கட்டயமாக கைது செய்தனர்.

இதேபோல், கோவில்பட்டியில் பள்ளி அருகே உள்ள டாஸ்மாக் கடையை மூடக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகாரம் அமைப்பினரையும் போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகாரம் அமைப்பினரும் கைது செய்யப்பட்டனர்.
பல இடங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு மக்கள் அதிகாரம் அமைப்பினரே பூட்டுப் போட முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டவர்களைப் போலீசார் கைது செய்தனர். விழுப்புரம், சிதம்பரம், சீர்காழி உட்பட பல்வேறு இடங்களில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
டாஸ்மாக்: பாட்டிலுக்கு ரூ.10 எக்ஸ்ட்ரா! பின்னணியில் இருக்கும் அதிர்ச்சி உண்மைகள்! விஜய் காதுக்கு வந்த செய்தி -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications