நீராருங் கடலுடுத்த.. தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நடனம் ஆடிய டிக்டாக் தமிழன்.. வைரல் வீடியோ
சென்னை: தமிழ்த் தாய் வாழ்த்தான நீராருங் கடலுடுத்த நிலமடந்தை பாடலுக்கு நடன கலைஞர் ஒருவர் நடனமாடுவது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ரேடியோ, டிவி என பொழுதுபோக்கு அம்சங்கள் வந்த நிலையில் தற்போது செல்போனிலும் சில செயலிகள் பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்டவையாக உள்ளன.
ஆம் டிக்டாக் எனப்படும் செயலிகள் மூலம் மக்கள் தங்களுக்குள் உள்ள ஆடல்,பாடல், வசனம் கூறுதல் உள்ளிட்ட கலைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

வைரல்
இதில் சினிமா பாடல்களுக்கு வாய் அசைப்பது, டான்ஸ் ஆடுவது, வசனம் பேசுவது என செய்து வருகின்றனர். இந்த நிலையில் டிக்டாக் தமிழன் என்ற பெயரில் ஒருவர் தமிழ்த் தாய் வாழ்த்துக்கு நடனம் ஆடியுள்ளார். இந்த சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகி வருகிறது.

துதி பாடல்
நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்.. என்ற பாடலுக்கு கலை நயத்துடன் இவர் ஆடும் நடனத்தை அனைவரும் ரசித்து வருகிறார்கள். தமிழ்த் தாய் வாழ்த்தை மனோன்மணியம் சுந்தரனார் இயற்றினார். புகழ் பெற்ற மனோன்மணியம் நூலில் இருந்து எடுக்கப்பட்ட துதி பாடலாகும். இதைத் தான் தமிழ்த்தாய் வாழ்த்து என்கிறோம்.

முயற்சி
பள்ளிகளில் தினமும் இறை வணக்கக் கூட்டங்களிலும் அரசு விழாவிலும் இந்த பாடல் முதல் பாடலாக பாடப்படுகிறது. இந்த பாடலை நடன ஆசிரியர் ஒருவர் ஆடி அதை வீடியோவாக வெளியிட்டுள்ளார். இவரது இந்த முயற்சியை ஏராளமானோர் பாராட்டி வருகின்றனர். பேஸ்புக்கில் இவரது வீடியோ ஷேக் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்த்தாய்
இவரது வீடியோவை ஷேர் செய்தும் லைக்ஸ் கொடுத்தும் வருகின்றனர். இந்த பாடல் தாய் மொழியான தமிழுக்கு வணக்கம் செலுத்த அமையும் பாடலாகும். டிக்டாக் செயலியை பலர் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி வருகின்றனர். இது போல் நடன அசைவுகள் மூலம் இந்த தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவதால் இதை இந்த காலகட்டத்து குழந்தைகளின் எளிதாக மனதில் பதியும் என்பதில் சந்தேகமே இல்லை.












Click it and Unblock the Notifications