மணிசங்கர் அய்யர் கோவை வந்தால் அவர் நாக்கை அறுப்போம்- பாஜக பகிரங்க மிரட்டல்
கோவை: கோவையில் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாக பேசிய மணிசங்கர் அய்யர் தப்பித்தவறி கோவை வந்தால் அவரின் நாக்கை அறுப்போம் என்று கோவையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் ஜி.கே.செல்வகுமார் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாகிஸ்தான் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பிரதமர் மோடி குறித்து அவதூறு கூறியதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மணிசங்கர் அய்யர் மீது புகார் எழுந்துள்ளது. மணிசங்கர் அய்யரின் இந்த பேச்சை கண்டித்து பா.ஜ.க.வினர் தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் கோவை காந்திபுரத்தில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் மணிசங்கர் அய்யரை கண்டித்து கோஷங்கள் எழுப்பியதுடன், அவர் படத்தை செருப்பால் அடித்தும் பா.ஜ.க.வினர் போராட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய பா.ஜ.க மாநிலப் பொதுச்செயலாளர் ஜி.கே.செல்வக்குமார், "பாகிஸ்தான் தொலைக்காட்சிக்கு மணிசங்கர் அளித்த பேட்டி மிக கொடூரமானது. எப்போது ஆட்சிக்கு வருவீர்கள் என கேள்விக்கு பதிலளித்த மணிசங்கர் அய்யர் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் முடிவு செய்தால் நாங்கள் சீக்கிரம் ஆட்சிக்கு வருவோம்" என்று மோடி கண்டிப்பாக கொல்லப்பட்டு விடுவார் என்கிற ரீதியில் பேசியிருக்கிறார். இது மிகவும் கேவலமான பேச்சு.
இப்படி பேசிய மணிசங்கர் அய்யர் கோவைக்கு வரும்போது அவரை முற்றுகையிட்டு அவர் நாக்கை துண்டிப்போம் என்று ஆவேசமாக கூறினார். இதனால் பா.ஜ.கவினர் மட்டுமின்றி அங்கு கூடியிருந்தவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். அதைத் தொடர்ந்து செல்வக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மணிசங்கர் அய்யர் நாக்கை அறுப்போம் என நீங்கள் பேசினீர்களே என்று கேட்டதற்கு "மணிசங்கர் அய்யர் கோவைக்கு வந்தால் நாங்கள் அது மாதிரி செய்வோம்" என்றார்.
எது மாதிரி செய்வீர்கள் என்று திரும்பவும் செய்தியாளர்கள் கேட்க, ''பேட்டி கொடுக்கும்போது அதை எல்லாம் சொல்ல முடியாது" என்று சிரித்துக் கொண்டே மழுப்பியுள்ளார். எனினும், தடையை மீறி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் 59 பேர் கைதாகி, பின்னர் விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications