விஜய் பொய் சொல்றதாகவே இருக்கட்டும், மோடி சொல்லலியா? மனுஷ்யபுத்திரன் நறுக்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி குறித்தும், சிங்கப்பூர் குறித்தும் தப்பான புள்ளி விவரங்கள் இருப்பதாக கூறி பாஜகவினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இது குறித்து, தமிழ் செய்தி தொலைக்காட்சி சேனல் ஒன்றில் விவாதம் நடைபெற்றது.

விவாதத்தில் பங்கேற்ற எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் கூறியதாவது:

பொய் தகவல் வந்துவிட்டது என பாஜகவினர் குதியாய் குதிக்கின்றனர். மோடி தனது தேர்தல் பிரசாரத்தின்போது, கருப்பு பணத்தை மீட்பேன் என்றார். அந்த கருப்பு பணத்தை பங்கிட்டு ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவேன் என மோடி வாக்குறுதியளித்தார்.

ஜெய்ஷா கணக்கில்

ஜெய்ஷா கணக்கில்

மொத்த பணத்தையும், மோடி, அமித்ஷா மகன் வங்கி கணக்கில் மொத்தமாக போட்டுவிட்டாரா? எதற்காக பிரதமர் பொய் சொன்னார்? விஜய் பொய் சொன்னார் என்றே வைத்துக்கொள்வோம். பிரதமர் உண்மைக்கு மாறாக பேசியது ஏன் என்று பாஜகவினர் ஏன் கேட்கவில்லை?

வழக்கு போடப்போகிறேன்

வழக்கு போடப்போகிறேன்

மேலும், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், விவாத நிகழ்ச்சியின்போது, தன் மீது தப்பான கருத்துக்களை கூறியதற்காக வழக்கு தொடரப்போவதாகவும், மனுஷ்யபுத்திரன் தெரிவித்தார்.

பாஜக விளக்கம்

பாஜக விளக்கம்

பாஜகவின் குருபரன் கூறுகையில், வெளிநாட்டிலுள்ள கருப்பு பணத்தை மீட்டால் ஒவ்வொருவர் கணக்கிலும் ரூ.15 லட்சம் அளிக்கும் அளவுக்கு பணம் தேக்கி வைக்கப்பட்டுள்ளது என்றுதான் மோடி கூறினாரே தவிர, ஒவ்வொருவர் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவேன் என்று அவர் கூறவில்லை என்று தெரிிவித்தார்.

ஆதாரம் இருங்குங்க

ஆதாரம் இருங்குங்க

அப்போதும் விடாத மனுஷ்ய புத்திரன், மோடி தேர்தல் பிரசாரத்தில் வாக்குறுதி அளித்ததற்கு ஆதாரங்கள் உள்ளன என்றார். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
ManushyaPuthiran asks BJP leaders why they don't ask modi about his lie on black money.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற