Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிர வைக்கும் மயிலாப்பூர் டாக்டர் சிவகுருநாதன்:பெண் நோயாளிகளை மிரட்டி உல்லாசம் அனுபவித்தது அம்பலம்

சென்னையில் பெண் நோயாளிகளை ஆபாச படம் பிடித்த தனியார் மருத்துவமனையின் மருத்துவர் சிவகுருநாதன் மீது மேலும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    சிகிச்சைக்கு வந்த பெண் நோயாளிகளை ஆபாசமாக வீடியோ எடுத்த சென்னை மயிலாப்பூர் மருத்துவர்

    சென்னை: மயிலாப்பூரில் பெண் நோயாளிகளை ஆபாச படம் பிடித்து மிரட்டி உல்லாசம் அனுபவித்த தனியார் மருத்துவமனை மருத்துவர் சிவகுருநாதன் மீது குவியும் பாலியல் புகார்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை மயிலாப்பூர் லோகநாதன் தெருவை சேர்ந்தவர் மருத்துவர் சிவகுருநாதன். 64 வயதான இவர், மயிலாப்பூர் நாட்டுசுப்பராயன் தெருவில் ஆர்.எம்.கிளினிக் என்ற பெயரில் மருத்துவமனை நடத்தி வருகிறார்.

    பெண்களுக்கான சிறப்பு டாக்டர் என்பதால் அப்பகுதியில் கைராசி டாக்டர் என்று பெயர் பெற்றவர். இந்நிலையில் இந்த மருத்துவர் மீது அடுக்கடுக்கான பாலியல் புகார்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

    தனி அறையில்

    தனி அறையில்

    நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு திருவள்ளூரைச் சேர்ந்த 29 வயது பெண்மணி ஒருவர் தனது இரண்டு குழந்தைகளுடன் நெஞ்சுவலி காரணமாக டாக்டர் சிவகுருநாதனிடம் சிகிச்சைக்கு சென்றுள்ளார். அப்போது டாக்டர் சிவகுருநாதன், இரண்டு குழந்தைகளையும் வெளியே அனுப்பிவிட்டு, பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறி, அந்த பெண்ணை மட்டும் தனி அறைக்கு அழைத்து சென்றுள்ளார்.

    மேல் ஆடையை கழற்றி

    மேல் ஆடையை கழற்றி

    பின்னர் சிகிச்சைக்கு வந்த பெண்ணுக்கு தெரியாமல் அறையில் தனது செல்போனை ஆன் செய்து வீடியோ எடுத்துள்ளார். அப்போது, அந்த பெண்ணின் மேல் ஆடைகளை கழற்றி ஸ்டெதஸ்கோப் உதவியுடன் பரிசோதனை செய்வது போல் நடித்துள்ளார்.

    கதறி அழுத பெண் நோயாளி

    கதறி அழுத பெண் நோயாளி

    அந்த நேரத்தில், எதிர்பாராத விதமாக சிகிச்சைக்கு வந்த நபர் ஒருவர் திடீரென டாக்டரை தேடி அறைக்குள் நுழைந்துள்ளார். அப்போது, மருத்துவர் சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் தவறாக நடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து வெளியே ஓடி வந்துவிட்டார். பின்னர், சிறிது நேரம் கழித்து மருத்துவர் மற்றும் சிகிச்சைக்கு வந்த பெண் வெளியே வந்தனர். அப்போது அந்த பெண் அவர் மருத்துவர் போல் என்னிடம் நடந்து கொள்ளவில்லை என்று கூறி கதறி அழுதுள்ளார்.

    பல பெண்களின் ஆபாச வீடியோ

    பல பெண்களின் ஆபாச வீடியோ

    உடனே அந்த நபர் மருத்துவரிடம் சென்று சம்பவம் குறித்து கேட்டுள்ளார். ஆனால் இதனை டாக்டர் பொருட்படுத்தவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், டாக்டரின் செல்போனை பறித்து பார்த்த போது சிகிச்சைக்கு வந்த பல பெண்களிடம் இதுபோல தவறாக நடந்து அதனை வீடியோ எடுத்து வைத்திருந்தது தெரியவந்தது.

    போலீஸ் ஆய்வு

    போலீஸ் ஆய்வு

    உடனே டாக்டர் அந்த செல்போனை பிடுங்கி அதில் இருந்த மெமரி கார்டை எடுத்து உடைத்து வெளியே வீசிவிட்டார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் மற்றும் நேரில் பார்த்த நபர் இருவரும் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி, இன்ஸ்பெக்டர் கண்ணன் டாக்டர் சிவகுருநாதனை பிடித்து அவரின் இரண்டு செல்போன்களையும் பறிமுதல் செய்து ஆய்வு செய்தார்.

    திடுக்கிடும் தகவல்கள்

    திடுக்கிடும் தகவல்கள்

    அப்போது, மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த சுமார் 60 பெண்களை சிகிச்சை என்ற பெயரில் ஆடைகளை கழற்ற சொல்லி அவர்களிடம் தவறாக நடக்கும் காட்சி பதிவாகி இருந்தது. இதைத்தொடர்ந்து அவரிடம் போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தார்.

    மிரட்டி உல்லாசம்

    மிரட்டி உல்லாசம்

    அதாவது முதல் நாள் சிகிச்சைக்கு வரும் பெண்களை அவர்களுக்கு தெரியாமல் ஆபாசமாக படமெடுத்து வைத்துக்கொண்டு சிகிச்சைக்கு மீண்டும் வருமாறு கூறி அனுப்பி விடுவார். அடுத்த முறை அந்த பெண்கள் சிகிச்சைக்கு வரும்போது அவர்களின் ஆபாச படங்களை காட்டி மிரட்டி மருத்துவமனையில் உள்ள அறையில் உல்லாசமாக இருந்துள்ளார்.

    மறைத்த பெண்கள்

    மறைத்த பெண்கள்

    இதேபோல் சிகிச்சைக்கு வந்த சுமார் 60க்கும் மேற்பட்ட பெண்களை இதுபோன்று ஆபாச படமெடுத்து சீரழித்துள்ளார் மருத்துவர் சிவகுருநாதன். பல பெண்கள் இந்த சம்பவம் வெளியில் தெரிந்தால் நமக்குதான் பிரச்னை என்று மூடி மறைத்துள்ளனர்.

    தனிமையில் ரசித்த டாக்டர்

    தனிமையில் ரசித்த டாக்டர்

    இதை டாக்டர் சிவகுருநாதன் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பல ஆண்டுகளாக நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை படம் பிடித்து மிரட்டி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். பெண்களை ஆபாசமாக எடுத்த வீடியோவை தனிமையில் இருக்கும் போது பார்த்து ரசித்தும் வந்துள்ளார் சிவகுருநாதன்.

    குவியும் புகார்கள்

    குவியும் புகார்கள்

    மருத்துவர் ஒருவர் தன்னிடம் சிகிச்சைக்கு வரும் பெண்களை ஆபாச படமெடுத்து மிரட்டி உல்லாசம் அனுபவித்து வந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர் சிவகுருநாதனால் பாதிக்கப்பட்ட பல பெண்கள் தொடர்ந்து அவர் மீது போலீஸில் புகார் அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+