Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மயிலாடுதுறை மங்கையின் கவர்ச்சி தோற்றம்.. அரசு அதிகாரி, டாக்டர் கெட்டப்பில் விழுந்த பல ஆண்கள்! ஓ காட்

Subscribe to Oneindia Tamil

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே இளைஞர்களை காதல் வலையில் வீழ்த்தி திருமணம் செய்து மோசடியில் ஈடுபட்ட இளம் பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.. இந்த பெண் போலீசில் எப்படி சிக்கினார் என்பது குறித்த தகவல் ஒன்று தற்போது வெளியாகியிருக்கிறது.

சீர்காழி பகுதியை சேர்ந்த சிவசந்திரன் என்பவர், தன்னுடைய அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாததால் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். அப்போதுதான், சிவசந்திரனிடம், தன்னை டாக்டர் என்று அறிமுகம் செய்து கொண்டு இளம்பெண் ஒருவர் அறிமுகமாகியிருக்கிறார். நாளடைவில் இந்த பழக்கமானது, நெருக்கமாகி, கடந்த 20ம் தேதி இருவருமே முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

mayiladuthurai sirkali government officer

புதுமண தம்பதி: புதுமண தம்பதி என்பதால், தனக்கு திருமணமான போட்டோக்களை சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார் சிவச்சந்திரன்.. அத்துடன் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸிலும் வைத்துள்ளார்.. இதில் சோஷியல் மீடியாவில் பகிர்ந்த போட்டோக்களை பார்த்து, புத்தூரை சேர்ந்த நெப்போலியன் என்பவர் அதிர்ச்சி அடைந்து போலீசுக்கு சென்றுள்ளார்.

சோஷியல் மீடியாவில் திருமண கோலத்தில் உள்ள பெண், தன்னுடைய மனைவி என்றும், 4 வருடங்களுக்கு முன்பு தன்னை திருமணம் செய்து ஏமாற்றி, மோசடி செய்த அந்த பெண்ணின் மீது நடவடிக்கை தேவை என்று புகார் தந்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டபோதுதான், சம்பந்தப்பட்ட இளம்பெண்ணை பற்றின பல்வேறு தகவல்கள் வெளியாகின.

கொடியம்பாளையம்: அதாவது, கொடியம்பாளையம் கிராமத்தை சேர்ந்த இந்த பெண்ணுக்கும், பழையாறு கிராமத்தை சேர்ந்த சிலம்பரசனுக்கும் கடந்த 2017ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிக்கு 2 பிள்ளைகளும் உள்ளனர்.

ஆனால், கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவரது கணவர் இறந்து விட்டதால், பெண்குழந்தையை இறந்து போன கணவரின் அண்ணன் ஜெயக்குமார் பராமரிப்பில் விட்டுவிட்டு, ஆண் குழந்தையுடன் கொடியம்பாளையத்தில் உள்ள தன்னுடைய அம்மா வீட்டில் தங்கி வசித்து வந்துள்ளார். அப்போது தன்னுடைய பெயரையும் மாற்றிக் கொண்டுவிட்டார்..

புத்தூர் கிராமம்: இதற்கு பிறகு, புத்தூர் கிராமத்தை சேர்ந்த நெப்போலியன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அடுத்த 3 வருடங்களில் அவரை விட்டு பிரிந்து, தலைமறைவாகி விட்டார். இதற்கு பிறகு, கடலூர் மாவட்டம் சிதம்பரம் கோல்டன் நகரை சேர்ந்த ராஜாவிடம் நெருங்கி பழகினார்.. அவரிடமும் தன்னை டாக்டர் என்று சொல்லிக் கொண்டுள்ளார்.. அவருடனும் குடும்பம் நடத்தி அங்கிருந்தும் தலைமறைவாகிவிட்டார். இதேபோல் ஈரோடு மாவட்டத்திலும் ஒருவரை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார்.

இந்த பெண்ணின் மீது நெப்போலியன் போலீசில் புகார் தந்ததுபோலவே, சிவச்சந்திரனும் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தந்துள்ளார்.. இப்படி பல ஆண்களை பல பெயர்களில் ஏமாற்றி திருமணம் செய்த பெண்ணை போலீசார் தற்போது சிறையில் அடைத்துள்ளனர்.

வசீகரமான தோற்றம்: இது குறித்து போலீஸ் தரப்பில் கூறும்போது, "சம்பந்தப்பட்ட பெண் கொடியம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர்.. பணக்கார குடும்பத்தை சேர்ந்த பெண் போன்ற தோற்றமும், வசீகரமான உடல்வாகு கொண்டவர். தன்னுடைய பெயரை அடிக்கடி மாற்றிக் கொண்டே வந்துள்ளார்.. சிலரிடம் டாக்டர் என்றும், மேலும் சிலரிடம் அரசு அதிகாரி என்றும் சொல்லி உள்ளார்.

ஏமாற்றி திருமணம் செய்த நெப்போலியனிடம் தன்னை அரசு அதிகாரி என்று சொல்லியே திருமணம் செய்துள்ளார்.. 4வதாக திருமணம் செய்த சிவசந்திரனின் நண்பர்கள், புதுமண தம்பதிகளின் போட்டோக்களை சோஷியல் மீடியாவில் பதிவிட்டனர். இதைதொடர்ந்த புகாரில் தான் அந்த பெண்ணின் உண்மை முகம் தெரியவந்துள்ளது.

விசாரணை: சிதம்பரம், ஈரோடு உள்ளிட்ட பல ஊர்களில் பல ஆண்களை தன்னுடைய வலையில் வீழ்த்தி ஏமாற்றி திருமணம் செய்து மோசடியில் ஈடுப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது... தற்போது சிறையிலுள்ள பெண்ணிடம், தொடர் விசாரணை நடத்த உள்ளோம்" என்று தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+