சென்னையில் 23ஆம் தேதி மதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வரும் 23ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகமான தாயகத்தில் கூட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் மலேசியா சென்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு மலேசியாவுக்குள் நுழைய தடைவிதிக்கப்பட்டது. மலேசியாவுக்கு ஆபத்தானவர்களின் பட்டியலில் அவரது பெயர் இருப்பதால் அவருக்கு தடை விதிக்கப்படுவதகா கூறப்பட்டது.

MDMK District Secretaries meeting will be on the 23rd of this month

இதற்கு அக்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அன்று இரவே வைகோ சென்னைக்கு திருப்பியனுப்பப்பட்டார்.

இந்நிலையில் மதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 23ஆம் தேதி நடைபெறும் அக்கட்சியின் பொதுச்செயலாளரான வைகோ அறிவித்துள்ளார்.
உயர்நிலைக்குழு, ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு கூடுகிறது 23ஆம் தேதி கூடுகிறது என்றும் தெரிவித்துள்ளார். வரும் 23ஆம் தேதி வெள்ளிக்கிழமை சென்னை தாயகத்தில் உள்ள மதிமுக தலைமை அலுவகத்தில் கூட்டம் நடைபெறுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
MDMK District Secretaries meeting will be on the 23rd of this month. A meeting will be held at the headquarters of the party's head office in Chennai Vaiko has announced.
Please Wait while comments are loading...