மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்து- கண் ஆபரேசன் மூலம் பரிகாரம் செய்த எடப்பாடியார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மீனாட்சி அம்மன் கோவிலில் வெள்ளிக்கிழமையன்று இரவு தீ விபத்து ஏற்பட்டது. இதில் 7000 சதுர அடி பரப்பளவு கொண்ட வீரவசந்தராயர் மண்டபம் இடிந்து விழுந்தது. மூன்று நாட்களாக கிழக்கு கோபுரவாசல் பகுதியில் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

இந்த தீ விபத்தினால் ஆள்பவர்களுக்கு ஆபத்து என்றும் ஆட்சிக்கு ஆபத்து என்றும் ஜோதிடர்கள் கருத்து கூறி வருகின்றனர். இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கண்ணில் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார்.

Meenakshi temple fire -Edapadi Palanisamy Paraikaram

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கண்ணில் புரை ஏற்பட்டது. இதனால் அவ்வப்போது பரிசோதனை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு அறுவைசிகிச்சை செய்யப்பட்டு வீட்டுக்குத் திரும்பினார். மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் அவருக்கு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. இன்றும் சில தினங்களுக்கு அவர் பார்வையாளர்கள் யாரையும் சந்திக்கப் போவதில்லை என்று கூறப்பட்டுள்ளது.

தீ விபத்து குறித்து ஜோதிடர் கே.பி வித்யாதரன் தனது பேட்டியில், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் வெள்ள நீர் புகுந்தது. இப்போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பஞ்சபூதங்கள் ஏதோ சொல்ல வருகிறது. சில அறிகுறிகளை காட்டுகிறது. கோவில்கள் மிகப்பெரிய அடையாளம். கோவில்களில் எந்த நிகழ்வு நடந்தாலும் ஆள்பவர்களை பாதிக்கும் என்றார்.

ஆள்பவர்களுக்கு விபத்துகள் வரலாம் ஆட்சியை தொடர முடியாத நிலை ஏற்படும். போராட்ட வாழ்க்கையாக மாறும். திட்டங்களை செயல்படுத்த முடியாமல் போகும். ரத்தம், நரம்பு தொடர்புடைய நோய்கள் ஏற்படும். ரத்த அழுத்தம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றார்.

செவ்வாய் நெருப்புக்கு உரிய கிரகம் சனியோட நட்சத்திரத்தில் செவ்வாய் அமர்ந்துள்ளார். போராட்டங்கள் ஏற்படும். மின்சார துறை, காவல்துறையில் குழப்பம் ஏற்படும் என்றும் கூறியுள்ளார்.

புறாக்கள் இறந்து விட்டன. புறா சமாதான பறவை. தீ விபத்து புறா பாதிக்கப்பட்டால் சைபர் கிரைம் அதிகரிக்கும். சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும். மக்கள் அரசுக்கு எதிராக தள்ளப்படுவார் என்றும் கூறியுள்ளார்.

தனக்கோ, ஆட்சிக்கோ எதுவும் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்கு பரிகாரமாக இப்போது கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
When the fire incident in Meenakshi Temple in Madurai is creating ripples the CM Edappadi Palanisamy has undergone an eye surgery in Chennai.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற