டாஸ்மாக் கடையை மூடுங்க.. கட்டடத்தின் மேல் ஏறி 2 பேர் தற்கொலை மிரட்டல்.. சீர்காழியில் பரபரப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சீர்காழி: புதிய மதுக்கடையை மூடக் கோரி 3 மாடி கட்டிடத்தில் ஏறி இருவர் தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

சீர்காழி அருகே உள்ளது தருமகுளம். இங்கே புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பை கிராம மக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Men threaten suicide, demanding Tasmac shop close

இந்நிலையில், இன்று மாலை இரண்டு பேர் உயரமான கட்டிடத்தின் மேல் ஏறி நின்று கொண்டு, டாஸ்மாக் கடை மூட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். உடனடியாக டாஸ்மாக் கடை மூடப்படவில்லை என்றால் மேலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வோம் என்று இருவரும் தற்கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதனால் அச்சமடைந்த பொதுமக்கள், அருகில் இருந்த போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் சீர்காழியில் பரபரப்பு நிலவி வருகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Two men have stood top of the building demanding Tasmac shop close in Sirkazhi.
Please Wait while comments are loading...