பாஜகவின் எதிர்ப்புகளுக்கு அடிபணிகிறதா மெர்சல்... 4 காட்சிகளை நீக்க தயாரிப்பாளர் தரப்பு முடிவு
மெர்சல் படத்திலிருந்து சர்ச்சைக்குரிய 4 காட்சிகளை நீக்க தயாரிப்பாளர் தரப்பு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை: மெர்சல் படத்திலிருந்து சர்ச்சைக்குரிய 4 காட்சிகளை நீக்க முடிவு செய்துள்ளதாக தயாரிப்பாளர் தரப்பு தெரிவித்துள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில், இயக்குநர் அட்லி இயக்கத்தில் தீபாவளிக்கு வெளியான படம் மெர்சல் ஆகும். இதில் மருத்துவர்களுக்கு எதிராகவும், ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா பரிவர்த்தனைக்கு எதிராகவும் வசனங்கள், காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தக் காட்சிகளுக்கு பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதை அடுத்து அப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க தயாரிப்பாளர் ஒப்புக் கொண்டுள்ளார். இதையடுத்து தயாரிப்பாளர் தரப்பும் படக்குழுவும் இணைந்து ஆலோசனையில் ஈடுபட்டன.
அப்போது படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளான மருத்துவம், ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா உள்ளிட்டவைகளை நீக்க முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து வரும் 23 அல்லது 24-ஆம் தேதியில் தணிக்கை குழுவிடம் கடிதம் கொடுத்து பின்னர் நீக்கப்படும் என்று ஆலோசனையில் முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
படத்தில் சர்ச்சைக்குரிய வசனங்கள் இல்லாததால் அவற்றை நீக்க தேவையில்லை என்று தணிக்கை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ள நிலையில் தயாரிப்பாளர் தரப்பு இவ்வாறு முடிவு எடுத்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications