மேட்டூர் அணை நீர்மட்டம் 62 அடியாக சரிவு.. கவலையில் டெல்டா விவசாயிகள்..வருணபகவான் மனது வைப்பாரா?
சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்ததால் அணையின் நீர்மட்டம் 62 அடியாக சரிந்துள்ளது. தினசரியும் ஒரு அடிக்கு மேல் குறைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 12 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணை தண்ணீரின் மூலம் தமிழகத்தில் 12 மாவட்டங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 12ஆம் தேதி முதல் காவிரி டெல்டா பாசனத்திற்கு குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும்போது 103.35 அடியாக இருந்த நீர்மட்டம் தற்போது மளமளவென குறைந்து வருகிறது.

வழக்கமாக ஜூன், ஜூலை மாதங்களில் தென்மேற்கு பருவமழை அதிகளவில் பெய்து காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும். ஆனால் இந்த ஆண்டு பருவமழை கைகொடுக்கவில்லை. கர்நாடகா அணைகளில் 100 அடிக்கு மேல் நீர் இருந்தாலும் குறைவான அளவே தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்து நீர்மட்டம் தொடர்ந்து சரிவடைந்து வருகிறது.
கடந்த 2 வாரத்திற்கு முன்பு காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததன் காரணமாக அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து அதிகபட்சமாக காவிரி ஆற்றில் 23ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் வரத்தொடங்கியதால் சுமார் 4 நாட்கள் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.
அணையில் இருந்து கடந்த ஒரு வாரமாக டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர்வரத்தை விட அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. மேட்டூர் அணையில் இன்று காலை நிலவரப்படி 26.5 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. இதில் 6 டி.எம்.சி. குடிநீர் திட்டங்கள் மற்றும் மீன்வளத்துக்கு பயன்படுத்தப்படும்.

மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 305 கனஅடியாக மட்டுமே உள்ளது. அணைக்கு மிக குறைந்த அளவில் தண்ணீர் வரும் நிலையில் அணையில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் நாள் ஒன்றுக்கு ஒரு அடிக்கு மேல் சரிந்து வருகிறது. நேற்று 63.50 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் ஒரு அடி சரிந்து 62.50 அடி ஆக குறைந்துள்ளது.
தற்போது அணையில் இருந்து தினமும் 1 டி.எம்.சி.வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையில் இருந்து இன்னும் 20 நாட்களுக்கு மட்டுமே டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. குறுவை சாகுபடி பயிர்களை காப்பாற்ற முடியுமா என்று காவிரி டெல்டா பாசன விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். வருண பகவான் மனது வைத்தால் மட்டுமே மழை பெய்து நடப்பாண்டு காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிக்கும். விவசாயம் பொய்த்துப்போகாமல் இருக்கும் என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
-
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications