நள்ளிரவில் "தட.. தட".. கதவைத் தட்டும் "பேய்"...தீப்பந்தம் ஏந்தி வினோத பூஜையில் கிராம மக்கள்!!
வேலூர்: வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள கிராமத்தில் பேய்கள் நடமாட்டம் இருப்பதாக கூறி அப்பகுதிமக்கள் நள்ளிரவில் தீப்பந்தம் ஏந்தி பூஜை நடத்தியுள்ளனர்.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ளது பத்தாப் பேட்டை கிராமம். இந்த கிராமத்தில் பேய் புகுந்துள்ளதாக அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். பேயை விரட்டும் நோக்கில் பூஜைகளையும் செய்துவருகின்றனர்.

கதவைத் தடதடவென தட்டும் பேய்
கிராமத்தில் பேய்கள் உலாவுகிறது என அச்சமடைந்துள்ள மக்களுக்கு மேலும் மேலும் அதிர்ச்சியளிக்கும் சம்பவங்கள் நிகழ்கிறதாம். கடந்த சில நாட்களாக நள்ளிரவில் வீட்டின் கதவுகளை தடதடவென பேய் தட்டுகிறதாம். இதனால் வீட்டிற்குள்ளேயே முடங்கிய மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

தானாக உருண்டு விழும் பொருட்கள்
படத்தில் வரும் பேய்கள் தானாக பொருட்களை உருண்டு விழச் செய்வதை நாம் பார்த்திருப்போம். ஆனால், தற்போது அந்த கிராமத்தில் நிஜத்திலேயே வீட்டினுள் இருக்கும் பொருட்கள், தானாகவே உருண்டு விழுகிறதாம். பொருட்கள் தானாக விழுவதற்கு காரணம் பேய் தானோ என சந்தேகிக்கும் கிராமமக்கள், தற்போது தீவிர கடவுள் வழிபாட்டில் இறங்கியுள்ளனர். பேய்கள் இரவில் கதவுகளை தட்டுகிறது என்பதால், வீடுகளில் வேப்பிலை வைத்தும், கதவுகளில் நாமம் வரைந்தும் பூஜை நடத்தி வருகின்றனர்.

நள்ளிரவில் தீப்பந்தம் ஏந்தி பூஜை
இப்படி செய்தும் வீட்டின் கதவுகள் நள்ளிரவில் தட்டப்படும் சத்தம் கேட்கிறதாம். இதற்காக கோவிலில் பூஜை நடத்தியபோது சாமி ஆடியவர் குறி கூறியுள்ளார். அதன்படி நேற்று நள்ளிரவில் ஊர் மக்கள் ஒன்றாக கூடி, தீ பந்தம் ஏந்தி ஊரில் இருந்து எல்லை கோவில் வரை சென்று பூஜை நடத்தினர்.

அச்சத்தை போக்க வேண்டும்
பேய்கள் பீதியில் உள்ள மக்கள் தங்களை பாதுகாக்க காவல் துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். காவல் துறையினர் இரவு நேரங்களில் ரோந்து பணிகளை மேற்கொண்டு கிராம மக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாகயாகும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications