Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தண்டவாளத்தில் பாறாங்கல்.. குண்டக்க மண்டக்க ரீல்ஸ்.. வசமாக சிக்கிய வடநாட்டு இளைஞர்கள்

Subscribe to Oneindia Tamil

தென்காசி: தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே ரீல்ஸ் மோகம் காரணமாக தண்டவாளத்தில் பாறாங்கற்களை தூக்கிப் போட்டுச் சென்ற வட மாநில தொழிலாளர்கள் இருவரை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் தினந்தோறும் இயக்கப்பட்டு வருகிறது. செப்டம்பர் 26 ஆம் தேதி இரவு சென்னைக்கு புறப்பட்ட பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் கடையநல்லூர் ரயில் நிலையத்தை கடந்து சங்கரன்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது, பாம்புகோவில் சந்தை ரயில் நிலையத்தை அடுத்த சங்கனாபேரி பகுதியில் தண்டவாளத்தில் மர்மப் பொருள் இருப்பதைக் கண்ட ரயில் ஓட்டுநர் சுதாரித்துக் கொண்டார்.

sankarankovil train crime

அப்போது, தண்டவாளத்தின் நடுவே சுமார் 20 கிலோ எடை கொண்ட பாறாங்கல் வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, ரயில் ஓட்டுநர் சாமர்த்தியமாக ரயிலை ஓட்டி சென்றதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து, ரயில் ஓட்டுநர் ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, ஸ்ரீவில்லிப்புத்தூர் ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். செங்கோட்டை - சென்னை இடையே செல்லும் முக்கிய ரயிலான பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க முயன்றவர்கள் யார், என்ன காரணத்துக்காக இந்த செயலில் ஈடுபட்டனர் என ரயில்வே போலீஸார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து, ரயிலை கவிழ்க்க முயன்றவர்களைக் கண்டுபிடிக்கும் வகையில் ரயில்வே போலீஸார் மப்டியிலும் அப்பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். இந்நிலையில், அந்த வழியாக வந்த வடமாநில தொழிலாளர்கள் தண்டவாளத்தில் ஆட்கள் இருப்பதைப் பார்த்ததும் வந்த வழியிலேயே திரும்பிச் சென்றுள்ளனர். சந்தேகம் அடைந்த போலீஸார் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றனர்.

அப்போது, அந்த தொழிலாளர்கள் தண்டவாளப் பகுதியில் இருந்து காட்டுப் பகுதி வழியாக அப்பகுதியில் உள்ள கல் குவாரிக்குச் சென்றுள்ளனர். இதுகுறித்து அக்கம் பக்கத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர், அதற்கு அடுத்த நாள் கல் குவாரிக்குச் சென்ற ரயில்வே போலீஸார் அங்கு தங்கியிருந்த வட மாநில தொழிலாளர்களை அழைத்து விசாரணை நடத்தினர்.


போலீஸ் விசாரணையில் இரண்டு பேர் முன்னுக்குப் பின் முரணாகவே பேசியுள்ளனர். இதனால், சந்தேகம் அடைந்த போலீஸார் அந்த இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சத்தீஸ்கர் மாநிலம், ஜகடல்பூரைச் சேர்ந்த ஃபல்சிங் பேகல் (21), மற்றொருவர் சத்தீஸ்கர் மாநிலம், மட்னார் நகரைச் சேர்ந்த ஈஸ்வர் மேடியா (23) என்பது தெரியவந்தது.

sankarankovil train crime

இருவரிடமும் மேற்கொண்ட விசாரணையில் கடந்த 26 ஆம் தேதி இரவு ரயில்வே தண்டவாளத்தில் பாறாங்கல்லை தூக்கி வைத்துச் சென்றது தாங்கள்தான் என்பதை அவர்கள் போலீஸாரிடம் ஒப்புக் கொண்டுள்ளனர். மேலும், கல் குவாரியில் பணியாற்றும் வட மாநில தொழிலாளர்கள் வேலையை முடித்த பின்னர் காட்டுப் பாதை வழியாகவே ரயில்வே தண்டவாளத்திற்கு நடந்து வருவதையும், ரயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து கொண்டு சமூக வலைதளங்களில் ரீல்ஸ் போடுவதையும் வாடிக்கையாக வைத்துள்ளது தெரியவந்துள்ளது.

அதேபோல, செப்டம்பர் 26 ஆம் தேதி இரவும் தண்டவாளத்தின் நடுவே பாறாங்கல்லை தூக்கி வைத்து ரீல்ஸ் எடுத்துள்ளனர். பின்னர், கல்லை அகற்றாமல் தண்டவாளத்திலேயே அப்படியே போட்டுவிட்டுச் சென்றது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அந்த இளைஞர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+