பாலில் தர சோதனை...பணம் வாங்கினால் கடும் நடவடிக்கை...ஆட்சியர் எச்சரிக்கை: வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

மதுரை: பால் தர சோதனை என்று கூறி விற்பனையாளர்களிடம் பணம் பறித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் எச்சரித்துள்ளார்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தனியார் பாலில் கலப்படம் உள்ளதாகக் கூறினார். அது பெரும் சர்ச்சையானது. இந்நிலையில் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட உணவுப் பொருட்களில் பிளாஸ்டிக் உணவுப் பொருள் கலப்படம் என செய்திகள் வெளியாகின. அதனைத் தொடர்ந்து தமிழக அரசு பாலில் தர நிர்ணய ஆய்வு செய்து, அதன் மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

Milk adulteration sample test going on in Madurai

பாலில் தர ஆய்வு மாதிரிகள் பல இடங்களில் நடைபெற்று வருகிறது. மதுரையிலும் நடைபெற்று வருகிறது. பால் தரத்தைக் கண்டறிய சோதனை செய்கிறேன் எனக் கூறி, ஆய்வுக்கு வரும் வியாபாரிகளிடம் பணம் வாங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் எச்சரித்துள்ளார்.

மேலும், மதுரையில் இதுவரை எடுக்கப்பட்ட 243 அய்வுகளில் 25 மாதிரிகள் தரமற்றவை என கண்டுபிடிக்கபப்ட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
In Madurai, milk samples are taken to assess its quality and collector warned no bribe in it and if anybody found corrupted serious action will be taken.
Please Wait while comments are loading...