ஊழல் பற்றி பேச ஓபிஎஸ்க்கு என்ன தகுதியிருக்கு? - அமைச்சர் சி.வி.சண்முகம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: தமிழக அமைச்சர்கள் மீது ஊழல் புகார் கூற ஓபிஎஸ்சுக்கு எந்த தகுதியும் இல்லை என சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.

அதிமுகவின் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணையுமா? இணையாதா? என மொத்த தமிழகமும் பட்டிமன்றம் நடத்தி வருகிறது. இந்நிலையில் விழுப்புரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொள்ளும் பொதுக்கூட்டத்தின் வேலைகளை பார்வையிட அமைச்சர் சி.வி.சண்முகம் வந்தார்.

Minister C.V.Shanmugam hard comment on O.Panneerselvam

அப்போது அவர், 'ஒபிஎஸ்ஸுக்கு தமிழக அமைச்சர்கள் மீது ஊழல் புகார் கூற எந்த தகுதியும் உரிமையும் இல்லை. அவர் முதலில் சேகர் ரெட்டி என்பவர் யார், அவரை தமிழ்நாட்டுக்கு அழைத்து வந்தது யார் என்கிர கேள்விகளுக்கு பதில் சொல்லட்டும். பிறகு தமிழக அமைச்சர்கள் குறித்து பேசட்டும்' என காட்டமாக பேசினார்.

Minister O S Manian Speech About NEET Exam-Oneindia Tamil

தமிழக அரசைக் கண்டித்து ஓ.பன்னீர்செல்வம் அணியினர் ஆர்ப்பட்டம் செய்யவுள்ளனர். இந்த நிலையில் அமைச்சர் சி.வி.சண்முகம் இவ்வாறு பேசியுள்ளார். அண்மைகாலமாக கமல் மற்றும் மு.க.ஸ்டாலின் குறித்து மிக கேவலமான முறையில் சி.வி சண்முகம் பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Minister C.V.Shanmugam commented that OPS does not have any right to criticize tamilnadu ministers.
Please Wait while comments are loading...