ஓ.பி.எஸ் சொல்றதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாதுங்க... சி.வி. சண்முகம் காட்டம்
தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு கெட்டுவிட்டதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறுவதற்கெல்லாம் தன்னால் பதில் கூற முடியாது என்று அமைச்சர் சி.வி. சண்முகம் காட்டமாக தெரிவித்தார்.
சென்னை: தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு கெட்டுவிட்டதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறுவதற்கெல்லாம் தன்னால் பதில் கூற முடியாது என்று அமைச்சர் சி.வி. சண்முகம் காட்டமாக தெரிவித்தார்.
அதிமுகவின் இரு அணிகளும் இணைவதற்கான பேச்சுவார்த்தைகள் நடப்பதற்கு முன்னரே இரு அணியினரும் முரண்பாடான கருத்துகளை தெரிவித்து அவர்களும் குழம்பி மக்களை குழப்பி வருகின்றனர்.
இந்நிலையில் ஒரு அணியினர் மீது மற்றொரு அணியினர் குறை கூறுவதும் என தொடர்ந்து நடைபெற்றுகத் கொண்டே வருகிறது.

நேற்று பேச்சுவார்த்தை
இந்நிலையில் நேற்று நிறைந்த அமாவாசை தினம் என்பதால் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேலும் அதிமுகவின் தலைமை கழகத்தில் கடந்த 3 நாள்களாக மாவட்ட செயலாளர்களுடன் முதல்வரும், மூத்த அமைச்சர்களும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

நல்ல நாள் என்பதால்
அதிமுக தலைமை அலுவலகத்துக்கு நேற்று வந்த அமைச்சர் சிவி சண்முகம் மிகவும் பிரஸ்ஸான முகத்துடன் இன்று நல்ல நாள் என்பதால் பேச்சுவார்த்தை நடக்கலாம் என்றார். மேலும் தினகரன் குறித்து நிருபர்கள் கேட்டதற்கு, அவரை கட்சியிலிருந்து ஒதுக்கி விட்டோம். எங்களுக்கும், அவருக்கும் சம்பந்தமில்லை என்றார்.

சுயமுடிவு
ஓ.பன்னீர் செல்வத்தின் கோரிக்கையை ஏற்று கட்சி அலுவலகத்தில் இருந்த சசிகலா பேனர்கள் அகற்றப்பட்டதாக கூறும் தகவல்கள் தவறு. இது எங்களது சொந்த முடிவு. அவர்கள் சொன்னதற்காக நாங்க செய்யவில்லை என்றார்.

எனக்கு தெரியாது
இந்நிலையில் கட்சி அலுவலகத்துக்கு காட்டமாக வந்திருந்த சிவி சண்முகத்திடம், பே்ச்சுவார்த்தை குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு எனக்கு எதுவும் தெரியாது. நாங்க பேச்சுவார்த்தைக்கு தயார்னு சொல்லிட்டோம். ஆனால் அவர்கள் தினம் ஒரு பேச்சு பேசுகிறார்கள் என்றார்.

பதில் சொல்ல முடியாது
கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி கொலை தொடர்பாக கருத்து தெரிவித்த ஓபிஎஸ், தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு கெட்டுள்ளது என்றார். இதுகுறித்த கேள்விக்கு சிவி சண்முகம் பதிலளிக்கையில், ஆங்.. அவர் எல்லாத்தையும் சொல்வாரு... அதுக்கெல்லாம் நாங்க பதில் சொல்ல முடியாது என்று காட்டமாக தெரிவித்துவிட்டார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications