அதெல்லாம் தினகரனுக்கு முழு உரிமை உண்டு... திண்டுக்கல் சீனிவாசன்
கட்சிப் பணியாற்ற டிடிவி தினகரனுக்கு முழு உரிமை உண்டு என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை: அதிமுகவின் கட்சிப் பணிகளில் இணைந்து பணியாற்ற டிடிவி தினகரனுக்கு முழு உரிமை உண்டு என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இரட்டை இலை சின்னத்தை மீட்க அதிமுகவின் இரு அணிகளும் ஒன்று சேர வேண்டும் என்று விரும்பி அதற்கான நடவடிக்கைகளில் இரு தரப்பை சேர்ந்த நிர்வாகிகளும் ஈடுபட்டனர்.
அப்போது தினகரனையும், சசிகலாவையும் கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று ஓபிஎஸ் அணியினர் நிர்பந்தித்தனர்.

ராவோடு ராவாக
இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் தினகரனின் பெயர் அடிப்பட்ட போது அமைச்சர் தங்கமணி வீட்டில் இரவோடு இரவாக அமைச்சர்கள் சிவி சண்முகம், ஜெயகுமார், வேலுமணி உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர்.

கூட்டுப் பேட்டி
இதைத் தொடர்ந்து கட்சியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தினகரனையும், சசிகலாவையும் கட்சியிலிருந்து ஒதுக்கி வைப்பதாக அமைச்சர் ஜெயகுமார் உள்ளிட்டோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.

31 நாள் உள்ளே
இதைத் தொடர்ந்து இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டு 31 நாள்களுக்கு பிறகு அவருக்கு ஜாமீன் கிடைத்தது. இந்நிலையில் டெல்லி விமான நிலையத்தில் அவர் கூறுகையில், கட்சியில் தொடர்ந்து நீடிப்பேன். என்னை நீக்கும் உரிமை பொதுச் செயலாளருக்கே உண்டு என்று தெரிவித்துள்ளார்.

இப்போது வெளியே
இதற்கு பதிலடியாக அமைச்சர் செங்கோட்டையனோ, தினகரன் கட்சியில் நீடிப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியே முடிவு செய்வார் என்று தெரிவித்திருந்தார்.

ஆதரவு குரல் கொடுக்கும் திண்டுக்கல்
தற்போது திண்டுக்கல்லில் அமைச்சர் சீனிவாசன் அளித்த பேட்டியில், கட்சிப் பணியாற்ற தினகரனுக்கு முழு உரிமை உண்டு. தினகரனை ஒதுக்கி வைத்ததாக கூறியது அமைச்சர் ஜெயகுமாரின் சொந்த கருத்து என்று தெரிவித்துள்ளார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications