தாசில்தார் அலுவலகம் கட்ட எதிர்ப்பு...அமைச்சர் கோகுல இந்திரா அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்...
சென்னை: கீழ்ப்பாக்கத்தில் தாசில்தார் அலுவலகம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் கோகுல இந்திரா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை டிபி சத்திரம் புஜ்ஜி தெரு மற்றும் பள்ளி தெரு இடையே விளையாட்டு மைதானம் உள்ளது. புதிதாக தாசில்தார் அலுவலகம் கட்டுவதற்காக இந்த மைதானத்தை அதிகாரிகள் தேர்வு செய்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள், தாசில்தார் அலுவலகம் கட்டுவதற்கு வேறு இடத்தை தேர்வு செய்யுமாறு கூறினர். ஆனாலும், கடந்த 2 நாட்களுக்கு முன், புதிய கட்டிடத்துக்கான பூமி பூஜை போடப்பட்டது.
இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் 50 க்கு மேற்பட்டோர் நேற்று மாலை அமைச்சர் கோகுல இந்திரா அலுவகலத்தை முற்றுகையிட்டு, கோஷமிட்டனர். ஆனால், அங்கு அமைச்சர் இல்லை.
இதுபற்றி அறிந்ததும், 8 வது மண்டல குழு தலைவர் அதிமுகவை சேர்ந்த வெங்கடேசன், முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்படதையடுத்து பொதுமக்கள் அனவைரும் கலைந்து சென்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications