அதிகாரிங்ககிட்ட வேலையே வாங்க முடியல - பொதுக்கூட்டத்தில் புலம்பிய அமைச்சர்! - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கிய கூட்டத்தில் அரசு அதிகாரிகளிடம் வேலை வாங்குவது மிகவும் சிரமாக உள்ளது என அமைச்சர் பேசியது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரத்தில் தொழில்துறை அமைச்சர் மணிகண்டன் மாணவ, மாணவியருக்கு மடிக்கணினி வழங்கினார். அதன்பின்பு கூட்டத்தில் பேசிய அமைச்சர், அரசு அதிகாரிகளிடம் வேலை வாங்குவது மிகவும் கடினமான விஷயமாக உள்ளது.

Minister Manikandan's controversial talk on government officials

அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் சேர்க்க வேண்டியது அதிகாரிகள் தான். ஆனால் அரசின் திட்டங்கள் மக்களை உடனடியாகச் சென்று சேர்வதில்லை. மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்துக்கு, டெண்டர் கோரப்பட்டபோது முன்னாள் முதல்வர் மறைந்துவிட்டார்.

அதன்பிறகு பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் தான் தற்போது மாணவர்களுக்கு மடிக் கணினியை வழங்குகிறோம். அதுவும் சில அதிகாரிகளை மாற்றிய பிறகுதான் இந்த வேலையும் நடைபெறுகிறது என அவர் மேடையில் புலம்பினார். அமைச்சரின் இப்பேச்சு அதிகாரிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Minister Manikandan blamed govt.officials in public meeting. It created controversy.
Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற