For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"சரி விடுங்க.. ஒரு ஃப்ளோவுல சொல்லிட்டேன்.. "பேய்க்கடி".. திகிலை கிளப்பிய அமைச்சர் பாண்டியராஜன்

அமைச்சர் பாண்டியராஜனின் நகைச்சுவை பேச்சு வைரலாகி வருகிறது

Google Oneindia Tamil News

செங்கல்பட்டு: "எல்லாவித கடிக்கும் அம்மா மினி கிளினிக்கில் மருந்து கிடைக்கும்.. பாம்பு கடிக்கு மட்டுமில்லை, பேய் கடிக்கும் இங்கு மருந்து உண்டு" என்று அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே செய்யூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தண்டரை, கடலூர் கொடூர், பெரும்பாக்கம் உள்ளிட்ட 4 கிராமங்களில் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மினி கிளினிக் திறந்து வைத்தார்.

Minister Pandiyarajan says about Mini Clinic, video goes viral on socials

அந்த வகையில், பெரும்பாக்கம் கிராமத்தில் மினி கிளினிக் திறந்து வைத்து அவர் பேசும்போது, "தமிழகத்தில் 2 ஆயிரம் மினி கிளினிக்கை திறக்க முதல்வர் உத்தரவிட்டதன் பேரில் திறக்கப்பட்டுள்ளது... ஒரு கிராமத்திற்கு முக்கியமானது கோயில்.. பள்ளிக்கூடம்.. அதுபோல மருத்துவமனையும்.

இந்த ஆஸ்பத்திரியில் ஒரு லட்ச ரூபாய் மதிப்புடைய மருந்துகளும் ஒரு டாக்டர், ஒரு துணை மருத்துவர், நர்ஸ், ஒரு உதவியாளர் என 4 பேர் இருப்பார்கள்.. இந்த மருத்துவமனையில் தொற்றுநோய் மற்றும் தொற்று பரவாத நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படும்.

ஏதோ சொல்லுவாங்களே, பாம்பு படி நாய்க்கடிக்கு மருந்து என்று, அந்த மாதிரி இந்த அம்மா மினி கிளினிக்கில் பாம்புகடி, நாய்கடியென எல்லா கடிக்கும் மருந்துகள் இருக்கு.." என்றவர், ஆமா, பேய் கடி இருக்கா என்ன? என்று பொதுமக்களை பார்த்து அமைச்சர் கேட்டார்.. பிறகு அங்கிருந்தோர் அனைவரும் சிரித்தவுடன், "இல்லை.. ஒரு ஃபுளோவில் தெரியாம சொல்லிவிட்டேன்.. " சமாளித்து பேச்சை திசை திருப்பினார்.

அமைச்சர் சொன்னாரே, அந்த "பேய்க்கடி" பேச்சுதான் இணையத்தில் வேக வேகமாக வைரலாகி வருகிறது.

English summary
Minister Pandiyarajan says about Mini Clinic
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X