Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மிசா பாண்டியன் Vs நூர்ஜஹான்! மதுரை மாநகர திமுக மல்லுக்கட்டு! அமைச்சர் பிடிஆரிடம் சென்ற பஞ்சாயத்து!

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரையில் திமுக பெண் கவுன்சிலரை மாநகராட்சி மண்டலத் தலைவியின் கணவர் தரக்குறைவாக பேசி மிரட்டல் விடுத்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 54வது வார்டு திமுக கவுன்சிலராக இருப்பவர் நூர் ஜஹான். காஜிமார் தெருவை சேர்ந்த இவர் மாநகராட்சி கணக்குக் குழுத் தலைவராகவும் உள்ளார்.

இந்நிலையில் மதுரை மாநகரட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற கவுன்சிலர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட நூர் ஜஹான், தனது வார்டு பிரச்சனை குறித்து மண்டலத் தலைவர் என்ற முறையில் பாண்டிச்செல்வியிடம் சில கேள்விகளை கேட்டிருக்கிறார்.

அப்போது அங்கிருந்த பாண்டிச்செல்வியின் கணவரும், மதுரை மாநகராட்சி முன்னாள் துணை மேயருமான மிசா பாண்டியன், நன்றி மட்டும் தான் சொல்லணும், கேள்வியெல்லாம் கேட்கக்கூடாது எனக் கூறியிருக்கிறார்.

Misa Pandian Vs Noorjahan! Madurai DMK Councilor fight! The Panchayat went to Minister PTR!

பதிலுக்கு திமுக பெண் கவுன்சிலரான நூர்ஜஹான், அப்படியெல்லாம் தன்னால் போக முடியாது என்றும் தனது வார்டு பிரச்சனையை பற்றி தாம் கேட்காமல் வேறு யார் கேட்பார்கள் என தில்லாக பதிலளித்துள்ளார்.

இதையடுத்து தான் நூர் ஜஹானை மிசா பாண்டியன் கோபத்தில் சற்று காட்டமாக திட்டியதாக தெரிவிக்கப்படுகிறது. பொம்பளைபிள்ளைகிட்ட இப்படியாண்ணே பேசுவீங்க, பார்த்து பேசுங்கண்ணே என நூர்ஜஹானின் கணவர் பதிலுக்கு மிசா பாண்டியனிடம் குரலை உயர்த்தியதாக கூறப்படுகிறது.

நூர் ஜஹான் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த பெண் கவுன்சிலர் என்பதால் இந்த விவகாரம் மதுரையில் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் மத்தியில் பேசு பொருளாக மாறியது.

இதனிடையே நூர்ஜஹான் மதுரை மத்திய தொகுதியை சேர்ந்தவர் என்பதால் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை தொடர்பு கொண்டு நடந்த விவரத்தை முறையிட்டிருக்கிறார். மேலும், மதுரை மாநகர மாவட்டச் செயலாளர் கோ.தளபதியிடமும் மிசா பாண்டியன் பற்றி நூர் ஜஹான் புகார் தெரிவித்துள்ளார்.

Misa Pandian Vs Noorjahan! Madurai DMK Councilor fight! The Panchayat went to Minister PTR!

இதனிடையே கட்சியை கடந்து காவல்துறையினர் வரை புகார் அளிக்கப்பட்டுள்ளதால் இருவரையும் சமாதானம் செய்து வைப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.

மாநகராட்சிகளில் இருந்து தினம் தினம் ஒரு புது பிரச்சனைகள் கிளம்புவதால் திமுக தலைமைக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+