மாற்றம் வேண்டும் என்றால் திருமாவளவன் பக்கபலமாக இருக்க வேண்டும்.. ஸ்டாலின் வலியுறுத்தல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனக்குப் பக்கபலமாக விசிக தலைவர் திருமாவளவன் இருக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர். தனபாலனின் தயார் நேசம்மாள் படத் திறப்பு விழா சென்னையில் உள்ள பெரியார் திடலில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார்.

MK Stalin expects support from Thirumavalavan

அப்போது பேசிய அவர், மாற்றம் வேண்டும் என்று கோரும் திருமாவளவன் தனக்கு பக்க பலமாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மேலும், தொடர்ந்து பேசிய அவர், அப்துல் கலாம் நினைவிடத்தில் பகவத் கீதை வைக்கப்பட்டுள்ளதற்குக் கண்டனம் தெரிவித்தார். அப்துல் கலாம் நினைவிடத்தில் பகவத் கீதை இடம்பெறுகிறது என்றால் அது மதவாதத்தைத் திணிக்கும் செயலாகும் என்று கூறிய ஸ்டாலின், உலக புகழப்பெற்ற திருக்குறள் அப்துல் கலாம் நினைவிடத்தில் இடம் பெறாதது ஏன் எனக் கேள்வி எழுப்பினார்.

ஸ்டாலின் விடுத்த அழைப்பு குறித்து திருமாவளவனிடம் கருத்து கேட்ட போது, மக்கள் பிரச்சனைகளுக்காக திமுகவுடன் இணைந்து செயல்படுவதில் எந்தவித சங்கடமும் இல்லை என்று திருமாவளவன் தெரிவித்தார். மேலும் கூட்டணி பற்றி, தேர்தல் நேரத்தில் ஏற்படும் சூழலுக்கு ஏற்ப முடிவு செய்யப்படும் என்று திருமாவளவன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
DMK working president MK Stalin has expected support from Thirumavalavan.
Please Wait while comments are loading...