மோடி அரசின் மூன்றாண்டு சாதனை: அதிமுக பாணியில் ஸ்டிக்கர் ஒட்டிய பாஜக
பாஜக அரசின் 3 ஆண்டுகால சாதனைகளை விளக்கும் வகையில், மோடி முகம் பதித்த ஸ்டிக்கர் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை: 2015ஆம் ஆண்டு வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வந்த நிவாரணப் பொருட்களில் அதிமுகவினர் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் படம் போட்ட 'அம்மா ஸ்டிக்கர்' ஒட்டியதுபோல் மோடி அரசின் 3 ஆண்டுகால நிறைவை தமிழக பாஜக ஸ்டிக்கர் வெளியிட்டு கொண்டாடியுள்ளது.
மத்திய அரசின் மூன்று ஆண்டு சாதனை குறித்த இணையதள சேவையை, தி.நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில், பி.ஜே.பி மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தேசிய செயலாளர் ஹெச். ராஜா ஆகியோர் தொடங்கி வைத்தனர். மேலும், பி.ஜே.பி அரசின் சாதனைகளை விளக்கும் வகையில், மோடி முகம் பதித்த ஸ்டிக்கர் ஒன்றும் வெளியிடப்பட்டது.
கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் பாஜக அமோக வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கடந்த 2014,மே 26 அன்று நாட்டின் ஆட்சித் தலைமைக்கு பொறுப்பேற்று கொண்டது.

மோடி அரசு
நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பின்னர் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்தியும் வருகிறது.

3 ஆண்டு நிறைவு
இத்தகைய திட்டங்களால் அடித்தட்டு மக்கள் எவ்வித பலனையும் பெறவில்லை என்று காங்கிரஸ், இடதுசாரி மற்றும் இதர எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில், இன்றுடன் பாஜக தலைமையிலான மத்திய அரசு தனது மூன்றாண்டு கால ஆட்சியை நிறைவு செய்கிறது.

நாடு முழுவதும் பயணம்
இதையடுத்து, பிரதமர் மோடி, அமித்ஷா, மத்திய அமைச்சர்கள், பாஜக மாநில முதல்வர்கள் ஆகியோர் நாடு முழுவதும் சென்று மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து கருத்து கேட்க உள்ளனர். அப்போது, பாஜக அரசின் மூன்று ஆண்டுகளின் செயல்பாடுகள் குறித்தும், மக்களிடம் விளக்கமளிக்க உள்ளனர்.

மோடி ஸ்டிக்கர்
இந்நிலையில், மத்திய அரசின் மூன்றாண்டு சாதனை குறித்த இணையதள சேவையை, தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில், பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா ஆகியோர் தொடங்கி வைத்தனர். மேலும், பாஜக அரசின் சாதனைகளை விளக்கும் வகையில், மோடி முகம் பதித்த ஸ்டிக்கர் ஒன்றும் வெளியிடப்பட்டது.

ஜெ., பாணி
கடந்த 2011 -2016 ஆம் ஆண்டு அதிமுக அரசு பதவியில் இருந்த போது 2015ஆம் ஆண்டு பெருவெள்ளம் ஏற்பட்டது. அப்போது, அதிமுகவினர் ஜெயலலிதா முகம் பதித்த ஸ்டிக்கர் ஒட்டினர். ஜெயலலிதா அரசை ஸ்டிக்கர் அரசு என்று பாஜக உள்ளிட்ட எதிர்கட்சியினர் வசைபாடினர். இப்போது பாஜகவினர் அதே பாணியை பின்பற்றத் தொடங்கியுள்ளனர்.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி












Click it and Unblock the Notifications