மோடி நாளை சென்னை வருகை... மெரீனா கடற்கரை சாலையில் பாதுகாப்பு ஒத்திகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மோடியின் வருகையை முன்னிட்டு சென்னை மெரீனா கடற்கரை சாலையில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறுகிறது. போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் வாகன ஒட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.

தினத்தந்தி நாளிதழ் பவளவிழா, எம்ஆர்சி நகரில் நடைபெற உள்ள திருமண விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை ஒருநாள் பயணமாக சென்னை வருகிறார்.

Modi to visit Chennai on Tomorrow

பிரதமர் மோடி சென்னை மெரீனா கடற்கரை சாலையில்தான் நாளை பயணிக்க உள்ளதால் இன்று அதற்கான பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.

போலீஸ் பாதுகாப்பு ஒத்திகைக்காக சென்னை மெரினா கடற்கரை சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. திடீரென போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் போலீசுடன் ஆங்காங்கே வாகன ஓட்டிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பிரதமர் மோடி நாளை சென்னை வருவதை ஒட்டி மெரினாவில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்துவதற்காக கடந்த ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதியன்று சென்னை வந்தார் பிரதமர் மோடி. அதன்பிறகு அவர் கோவைக்கு வந்திருந்தாலும் சென்னைக்கு ஓராண்டுகள் கழித்து வருகிறார். சென்னைக்கு வரும் பாஜக தலைவர்கள் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்துகின்றனர். கடற்கரை சாலையில் பயணிக்கும் மோடி மெரீனாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு செல்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சென்னை பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி நாளையே டெல்லி திரும்புகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Prime Minister Modi to visit to Chennai on Monday, to attend a couple of events. It will be a one-day trip and he will return to the capital on the same day

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற